பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூற்றம்

(2) துன்பம், பிரிவு - sorrow,

seperation

'கூதிர் உருவின் கூற்றம் காதலர்ப்

பிரிந்த எற்குறித்து வருமே?'

(குறு.197: 4-5)

(3) அறனின்மை - unrighteous

'உறல்முறை மரபின் கூற்றத்து

அறன் இல் கோல் நற்கு

அறிந்திசினோரே' (குறு.267:7-8)

(4) கொலை - killing

'கூற்றத் தன்ன கொலைவேல்

மறவர்' (குறு.283: 5)

(5) சீற்றம், சினம் - angry, wrath

'மாற்று அருஞ் சீற்றத்து, மா இருங்

கூற்றம்' (பதி.51: 35)

(6) வலிமை - powerful

'மன்பதை சவட்டும் கூற்ற முன்ப'

(பதி.84: 7)

(7) இறப்பு - death

'ஒன்னார் உடங்கு உண்ணும்

கூற்றம் உடலே' (பரி.2: 50)

(8) நிலையாமை - transitory

'நாற்றம்சால் நளிபொய்கை

அடைமுதிர் முகையிற்குக்

- கூற்றம்போல் கறைபடூஉம்

வாழ்நாளும் நிலையுமோ'

(கலி.17:11-12)

(9) ஒப்பின்மை - unmatched

'தமிழ்தலை மயங்கிய தலையாலங்

கானத்து மன்னுயிர்ப் பன்மையும்

கூற்றத்து ஒருமையும் நின்னொடு

தூக்கிய வென்வேற் செழிய'

(புறம்.19: 2-4)

(10) இரக்கமின்மை - uncompassionate

'நனி பேதையே, நயன் இல்

கூற்றம்! (புறம்.227: 1)

(11) அழிவு - destruction

'பேயும் அணங்கும் உருவு கொண்டு

அய்கோல் கூற்றக் கொல்தேர்,

கழுதொடு கொட்ப' (மது.632-633)

(12) இன்னாமை - unpleasant

'கூற்றத்தைக் கையால்

விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்'

(குறள். 894)

(13) நடுவுநிலைமை, அருளின்மை -

neutral, merciless

'என்னானும் ஒன்றுதம் கையுறப்

பெற்றக்கால் பின்னாவ தென்று

பிடித்திரா முன்னே கொடுத்தார்

உயப்போவர் கோடில்தீக் கூற்றம்

கூற்றம்


தொடுத்தாறு செல்லும் சுரம்'

(நாலடி.5)

(14) அச்சம் - fear

'அறிமின் அறநெறி அஞ்சுமின்

கூற்றம்' (நாலடி.172: 1)

(15) கொடுமை, துன்பம் - cruel, pain

'கொலைவேல் நெடுங்கண்

கொடுங்கூற்றம் வாழ்வ தலைநீர்த்

தண்கானல் அறியேன்

அறிவேனேல் அடையேன்

மன்னோ ' (சிலப். 7.10)

(ஆ) கூற்று Kuru

சினம் - wrath

'கூற்று வெகுண்டு வரினும்,

மாற்றும் ஆற்றலையே' (பதி.14: 10)

இறப்பு - death

'உயிர் உண்ணும் கூற்றுப்

போன்றன' (புறம்.4: 12)

இன்னாமை, அறனின்மை -

harmful, unrighteous

'இன்னாது உற்ற அறன் இல்

கூற்றே !' (புறம்.255: 4)

கொலை - killing)

'குமரிப் படை தழீ இய கூற்று

வினை ஆடவர்' (புறம்.294: 3)

அருளின்மை, இரக்கமின்மை -

merciless, pitiless

'ஆள்பார்த்து உழலும் அருளில்

கூற்றுண்மையால் தோட்கோப்புக்

காலத்தால் கொண்டுய்ம்மின்

பீட்பிதுக்கிப் பிள்ளையைத்

தாய் அலறக் கோடலான் மற்றதன்

கள்ளம் கடைபிடித்தல் நன்று'

(நாலடி.20) |

(இ) மீளி Mili

வலிமை - strength

'மீளி முன்பின் காளி காப்ப

(ஐங்.374: 2)

(16) ஆற்றல் - powerful

'மீளிவேல் தானையர்' (கலி. 31:

24)

சீற்றம் - wrath

'மீளி மறவனும் போன்ம்' (கலி.

104: 50)

(ஈ) காலன் Kalan

சினம், வலிமை - anger, strength


116