பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூற்றம்

'காலன் அனைய கடுஞ்சினமுன்ப!

(பதி. 39: 8)

இறப்பு - death

'மடங்கலும், கணிச்சியும்,

காலனும், கூற்றும், தொடர்ந்து

செல் அமையத்துத் துவன்று உயிர்

உணீஇய' (கலி. 105: 20-21)

துன்பம் - woe

'காலன் போல் வந்த கலக்கத்தோடு

என் தலை மாலையும் வந்தன்று,

இனி' (கலி. 143: 40-41)

இரக்கமின்மை - pitiless

'காலன் என்னும் கண்ணிலி

உய்ப்ப (புறம்.240: 5)

(உ) மடங்கல் Mataikal

வலிமை

'ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு

உழிதரும் மடங்கல் வண்ணம்

கொண்ட கடுந் திறல்' (பதி.62: 7-8)

சினம்

'மடங்கல்போல் சினைஇ

மாயஞ்செய் அவுணரை' (கலி.2: 3)

இறப்பு

'மடங்கலும், கணிச்சியும்,

காலனும், கூற்றும், தொடர்ந்து

செல் அமையத்துத் துவன்று உயிர்

உணீஇய' (கலி.105: 20-21)

மாறாமை

'மடங்கல் உண்மை மாயமோ

அன்றே ' (புறம்.363: 9)

(ஊ) ஞமன் Naman

அழிவு - destruction

'தீ' செங் கனலியும், கூற்றமும்,

ஞமனும், மாசு இல் ஆயிரம் கதிர்

ஞாயிறும், தொகூஉம் ஊழி

ஆழிக்கண்' (பரி.3: 21-23)

(17) நடுநிலைமை - unbiased

'திருந்து கோல் ஞமன் தன்

மெய்யின் பிரிவித்து' (பரி.5: 61)

(எ) மறலி Marali

வலிமை

'மறலி யன்ன களிற்றுமிசை

யோனே' (புறம். 13: 4) -

இறப்பு

'வழித்திரு மைந்தன் ஆவி

கொளவரும் மறலி ஊர்திக்


கெண்டை


கழுத்தணி மணியின் ஆர்ப்போ '

(பெரிய, 1:3.28)

(ஏ) கணிச்சிக் கூர்ம்படைக்

கடுந்திறல் ஒருவன் Kaniccik

kurmpataik katuntiral oruvan

இறப்பு

'கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல்

ஒருவன் பிணிக்கும் காலை,

இரங்குவிர் மாதோ'

(புறம். 195: 4-5)

கூற்றுவன் பாசம் Kurruvan pacam

(1) துன்பம்

பெறலரு மென்மகள் பிரிந்தனள்

அம்மெனக் கூறியகிளவி

கூற்றுவன் இமிழ்த்த பாசம்

போலப் பையுள் செய்ய'

(பெருங். உஞ்.47: 246-248)

கூனி Kini (a villainous character)

(1) தீமை, கொடுமை

இன்னல் செய் இராவணன் இழத்த

தீமைபோல் துன்னருங்

கொடுமனக் கூனி தோன்றினாள்'

(கம்ப.அயோ .132:3-4)

கெண்டை Kentai (a fish)

(1) பரத்தை - prostitute

'அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற

விளை கனி குண்டுநீர் இலஞ்சிக்

கெண்டை கதூஉம்' (குறு.91: 1-2)

(2) மகளிர் - women|

'குருகு கொளக் குளித்த கெண்டை

அயலது உருகெழு , தாமரை

வால்முகை வெரூஉம்'

(குறு.127: 1-2)

(3) நீர்வளம் - rich water resource

கெண்டை பாய்தர அவிழ்ந்த

வண்டு பிணி ஆம்பல் நாடு

கிழவோனே' (ஐங்.40: 4-5)

(ஆ) கயல் Kayal

(4) தலைவி

'கயல் ஆர் நாரை போர்வில்

சேக்கும்' (ஐங்.9: 4)

பரத்தை


117