பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கை

'கூரல் கொக்கின் குறும்பறைச்

சேவல், வெள்ளி வெண்தோடு

அன்ன, கயல்குறித்து'

(அகம்.346: 3-4)

வளமை - flourishing

‘குறுங்காற் காஞ்சிக் கொம்பர் ஏறி,

நிலாமருள் குட்டம் நோக்கி,

நெடிது இருந்து, புலவுக்

கயலெடுத்த பொன்வாய்

மணிச்சிரல்' (சிறு.179-181)

கை Kai

(1) வன்மை - strong

"வன் கை இடையன் எல்லிப்

பரீஇ' (நற்.169:7)

(2) உதவி - help, assist

'கண்ணுறு விழுமம் கை போல்

உதவி' (நற்.216: 3)

(3) ஈகை - benevolence, giving

'ஓவாது ஈயும் மாரி வண்கை '

(குறு.91: 5)

(4) உழைப்பு - hard work, effort

'புன் புலம் வித்தும் வன் கை

வினைஞர்' (பதி.58: 15)

(5) பயன்

'பிடிக்ககணம் சிதறும்

பெயல்மழைத் தடக்கை ' (சிறு.124)

(6) முயற்சி - perseverance, persistance

'நன்கு திரண்டு பெரியவாம்.

ஆற்றவும் முன்கை நெடியார்க்குத்

தோள்' (பழமொழி. 156)

(7) நட்பு - friendship

'இன்னா செயினும் விடுதற்கு

அரியாரைத் துன்னாத் துறத்தல்

தகுவதோ துன்னரும்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப

களைபவோ கண்குத்திற்று

என்றுதம் கை' (நாலடி.226)

(ஆ) தடக்கை tatakkai

(8) புகழ் - fame

'படியோர்த் தேய்த்த பல்புகழ்

தடக்கை ' (அகம்.22: 5)

(9)வெற்றி - victory

'ஓடுபுறம் கண்ட, தாள்தோய்

தடக்கை ' (அகம்.22: 5)

(10) வலிமை - strong

'எழுமரம் கடுக்கும் தாள் தோய்

தடக் கை' (புறம்.90: 10)


கைமேல் கைவைத்துப்..

(இ) உடுக்கை இழந்தவன் கை

utukkai ilantavan kai)

(11) உதவி | நட்பு - help, aid,

friendship

'உடுக்கை இழந்தவன் கை போல.

ஆங்கே இடுக்கண் களைவதாம்

நட்பு ' (குறள்.788)

(ஈ) நீண்டகை Nintakai

ஈகை - benevolence, giving

'தேயங் காவலனாய்த் திசை

யாவினும் ஈய நீண்டகை யேந்த

னகர்திசை' (நீலகேசி.23: 2-3)

(உ) வளர்கை Valarkai

(12) அருள்

சூலம் ஏந்தி வளர் கையினர்'

(திருஞான.தேவா.2429: 1)

(ஊ) வளையுடைக்கை Valaiyutaikkai

(13) மென்மை, பெண்மை

'வளையுடைக் கையிற் சூலம்

ஏந்தி' (சிலப். 12: 1.60)

(எ) தாள் தழுவு கையன் Tal

taluvu kaiyan

(14) சிறப்பு

'தாள் தழுவு கையன்

தாமரைப்பூஞ் சேவடியன்'

திருநா தேவா. 1275: 1)

(ஒப்பு) Hand அரச உரிமை,

அன்பு, ஆதாரம், உழைப்பு,

தியாகம், - நட்பு, பாதுகாப்பு,

பாரடு, பிறப்பித்தல், மேன்மை ,

வணக்கம், வாழ்த்து,

விருந்தோம்பும் பண்பு.

கைம்மேல் கைவைத்துப் பொரிமுகந்து

அட்டல் Kaimel kaivaittup porimukantu

attal

(1) திருமணம்

வரிசிலை வாள் முகத்து

என்னைமார் தாம் வந்திட்டு,

எரிமுகம் பாரித்து என்னை

முன்னே நிறுத்தி, அரிமுகன்

அச்சுதன் கைம்மேல் என் கை


118