பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திர ரதன்

'காதலர் உழையராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன்'

(குறு.41: 1-2)

சித்திர ரதன் Cittira ratan

(1) வள்ளண்மை

'சீரணி முழவம் ஓவாச் சிரீநிலை

அதனை ஆளும் காரணி தடக்கை

வேந்தன் கான்முளை கனபொன்

ஆர்ந்த ' (சூளா .327: 1-2)

சிதடு Citatu (blind)

(1) சிறப்பின்மை , இயலாமை /

பயனின்மை - insignificant,

uncapable, waste

'சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல்

பிண்ட மும் .. ... ... .. எண்பேர்

எச்சம் என்று இவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியம் இல்

என' (புறம்.28: 1-5)

(ஆ) துஞ்சு புலி இடறிய சிதடன்

Tuicu puli itariya citatan

(2) அறியாமை, மடமை - ignorance,

foolish

'துஞ்சு புலி இடறிய சிதடன்

போல' (புறம்.)

(ஒப்பு ) Blindness, Blindfold

அறிவாற்றல், உருவ வழிபாடு,

தொலை முன்னோக்கு; அறியாமை,

இருள், உண்மையை அடைய

முடியா நிலை, கண் கட்டப்பட்ட

நிலை, தவறு, பித்துப் பிடித்த

நிலை, பொறுப்பற்ற நிலை,

முட்டாள்தனம்.

சிந்துரம் Cinturam

(1) சிவப்பு நிறம்

'சிந்துரக் கால் சிரம் செக்கர் சூடிய'

(கம்ப. ஆரண்.892: 3)

(2) மங்கலம் - auspicious

'சிந்துரம் இலங்கத் தன்

திருநெற்றிமேல் திருத்திய

கோறம்பும் திருக்குழலும்'

(நாலா.259: 1-2)

சிமை Cimai (peak)

(1) உயர்வு - lofty


சிலம்பி

'வரை ஓங்கு உயர் சிமைக் கேழல்

உறங்கும்' (ஐங்.268: 3)

(2) அருமை - superior

'துளியின் உழந்த தோய்வு அருஞ்

சிமை. தொறும்' (பரி.7: 13)

(3) கடவுட்டன்மை - godly

'அருந் திறல் கடவுள் காக்கும் உயர்

சிமை ' (புறம். 158:11)

(ஆ) சிமையம் Cimaiyam

உயர்வு - high

'வாஅன் தோய் சிமையம்

தோன்றலானே' (அகம்.378: 24)

(இ) சென்னி Cenni

உயர்வு - high

'கல் உயர் சென்னி இமயவில்

நாண் ஆகி' (பரி.தி.1: 77)

(ஈ) சிகரம் Cikaram

உயர்வு - high

'மகர நெற்றி வான் தோய் புரிசைச்

சிகரம் தோன்றாச் சேண் உயர் நல்

இல்' (அகம்.181; 20-21)

(உ) முகடு mukatu

உயர்வு - high |

"திரைப் பிதிர் கடுப்ப முகடு

உகந்து ஏறி' (நற்.89: 2)

சிரல் Ciral (king fisher)

(1) தலைவி

'எரி அகைந்தன்ன தாமரைப்

பழனத்து, பொரி அகைந்தன்ன

பொங்கு பல் சிறு மீன், வெறி

கொள் பாசடை, உணீஇயர்,

பைப்பயப் பரை தபு முது சிரல்

அசைபு வந்து இருக்கும்'

(அகம்.106:1-4)

சிலம்பி Cilampi (spider)

(1) படைப்புத்திறன் - creativity

கொலை வல் வேட்டுவன் வலை

பரிந்து போகிய கானப் புறவின்

சேவல் வாய் நூல் சிலம்பி அம்

சினை வெரூஉம், அலங்கல்

உலமைஅம் காடு இறந்தோரே?'

(நற்.189:7-10)

(2) நுட்பம் - fineness, minute


127