பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பு


‘நுண் சிலம்பி வலந்தன நுண்

துகில்'

(3) அறிவு - wisdom

'ஞானமுடைய ஒரு சிலந்தி நம்பர்

செம்பொன் திருமுடிமேல் கானல்

விரவும் சருகுதிரா வண்ணம்

கலந்த வாய் நூலால் மேனற்

றிருமேற் கட்டி என விரிந்து

செறியப் புரிந்துளதால்'

(பெரிய,4204: 3-8)

(ஆ) சிலம்பி நல் தூங்குதல்

Cilampi nul tuhkutal

(4) இயக்கமின்மை - inactive -

'சிலம்பி வால் நூல் வலந்தன

தூங்க' (நெடுநல்.59)

(ஒப்பு) Spider அரும்புதிர் நெறி,

அறிவாற்றல், கடும் உழைப்பு,

திறமை, தொடர் தியாகம்,

நம்பிக்கை, நெசவாளி, நெய்தல்,

படைப்பாளி, மகிழ்வு, வளமை,

விண்ணேறுதல்; இழப்பு, கடுஞ்

சிக்கலமைவு, கீழுலகக் கடவுள்,

சூழ்ச்சி, நம்பிக்கை இழப்பு,

பகைமை எண்ணம், பழிசூழ்

நோக்கு, பேராசை.

சிலம்பு Cilampu (anklet)

(1) ஒலி - tinkling

'முத்து அரிப் பொற்சிலம்பு

ஒலிப்பத் தத்துற்று' (நற்.110: 5)

(ஆ) சிலம்பு கழித்தல் Cilampu

kalittal

(2) மாற்றம் - change

'.. .. .. .. தன் கால் அரி அமை

சிலம்பு கழி இ' (நற்.12: 4-5)

(இ) குடைச்சூல் Kutaiccul

(3) வளமை - fertile

'வளம் கெழு குடைச்சூல்,

அடங்கிய கொள்கை ' (பதி.57:11)

சிலாதலம் Cilatalam

(1) ஒளி - light, sparkling


சிவலோகம்


இலகொளிச் சிலாதலம் தொழுது

வலங்கொண்டு' (சிலப். 10: 25)

(ஆ) நிலாக்கல் வட்டம் Nilakkal

vattam

ஒளி - light, sparkling

'நின்றொளி திகழ்வதோர்

நிலாக்கல் வட்டமும்' (சூளா, 192:

3)

சிவப்பு Civappu (red)

(1) வெகுளி | சினம் - anger

'கறுப்பும் சிவப்பும் வெகுளிப்

பொருள' (தொல்.855)

(2) வேந்தர் - king, royalty

'செம்மலர்க் கண்ணியர்

செம்பொன் தாரினர்

கொய்ம்மலர்க் குங்குமம் குழைந்த -

சாந்தினர் கைம்மலர் மணிநகை

கடகம் வில்லிட மெய்ம்மலர்

அணியினர் வேந்தர் ஆயினார்'

(சூளா .1876)

(ஆ) செவ் (செம்மை ) Cev

(3) அழகு

‘எய்யா நல் இசை, செவ் வேற்

சேஎய்' (திருமுரு.61)

(ஒப்பு) Red அதிர்ஷ்டம், அழகு,

அன்பு, ஆண்மை , ஆற்றல்,

உணர்ச்சி, உயிர்த்தியாகம்,

உள்ளுயிர்ப்பு, ஒளி, கருப்பை,

காதல், சூரியன், தியாகம், துணிவு,

தூய்மை, தெற்கு, படைப்பாற்றல்,

புரட்சி, மகிழ்ச்சி , மீட்பு,

வழிபாடு, வளமை, வாழ்க்கை ,

விருப்பம், விழிப்பு நிலை,

வெற்றி; ஆபத்து, இறப்பு, குருதி,

குற்றம், கோடைக்காலம், சினம்,

தீமை, நெருப்பு, பகைமை, பழி,

போர், வறட்சி, வெப்பம்;

வேட்டையாடுதல்.

சிவலோகம் Civalokam

(1) மூப்பின்மை , பேரின்பம் - youth,

blizz

'திறலுடைச் செய்கை செய்து

சிவலோகம் அதனை எய்திப்

பெறலரும் இளமை பெற்றுப்


















128