பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவிகை


பேரின்பம் உற்றார் அன்றே'

(பெரிய.402: 5-8)

(ஆ) வான்பதம் Vanpatam

(2)அழிவின்மை

'அழிவில் வான்பதம் கொடுத்து

எழுந்தருளினார் ஐயர்'

(பெரிய.548: 7-8)

(இ) சிவபுரி Civapuri

(3) நன்மை , தீதின்மை - good, evilless

'தீதிலா நிலைச் சிவபுரி'

(பெரிய, 1043:7)

சிவிகை Civikai

(1) மேன்மை - esteem

'.. .. .. .. தண்டு ஆர் சிவிகையும்,

பண்ணி ' (பரி. 10: 17)

(2) உயர்வு - lofty

'அறத்து ஆறு இது என வேண்டா

சிவிகை பொறுத்தானொடு

ஊர்ந்தானிடை' (குறள்.37)

(ஆ) சிவிகை ஏற்றுவித்தல்

Civikai erruvittal

உயர்வு - honour

'நம்மையும் ஓர் பொருள் ஆக்கி

நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை

எனக்கு அருளிய ஆறு

ஆர்பெறுவார்' (திருவா.51:9.3-4)

சிறகு Ciraku (feather, wing)

(1) அழகு - beautiful

வரி அணி சிறகின் வண்டு உண

மலரும்' (நற்.399: 3)

(2) விரைவு - quick

'கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப'

(பதி.25: 12)

(ஆ) தூவி Tivi

(3) மென்மை - soft

'கவிர் இதழ் அன்ன தூவிச்

செவ்வாய்' (குறு.103: 2)

(இ) அன்னத்தூவி Annattivi

மென்மை

'இலங்குமான் அவிர் தூவி அன்ன

மென்சேக்கையுள்' (கலி.13: 15)


சீதை


(ஈ) உடு Utu

விரைவு - speed

'உடு உறு கணையின் போகி'

(அகம்.292: 12)

(ஒப்பு) Feather ஆன்மா,

இலேசான தன்மை, உண்மை,

உயரம், உலர்ந்த நிலை,

ஒப்பனை, ஒளிக்கதிர், காலியான

நிலை, காற்று, தூய்மைப்படுத்துதல்,

நிறைவு, நீதி, பகட்டு, பெருமை,

மறுபிறப்பு, வலிமை, விரைவு;

இறப்பு.

சிறை Cirai (prison)

(1) காவல், பாதுகாப்பு - secure, safe

'சிறை காக்கும் காப்பு எவன்

செய்யும்? மகளிர் நிறைகாக்குங்

காப்பே தலை' (குறள்.57)

(2) தடை - obstruction, obstacle

'தூய்மை மனத்தவர் தோழர்

மனையகத்தும் தாமே தமியர்

புகல்வேண்டா - தீமையான்

ஊர்மிகின் இல்லை கரியோ

ஒலித்துடன் நீர்மிகின் இல்லை

சிறை' (பழமொழி.335)

(3) காவல் / கட்டுப்பாடு - Watch,

control -

'நிறையான் மிகுகல்லா நேரிழை

யாரைச் சிறையான் அகப்படுத்தல்

ஆகா - அறையோ! வருந்த

யாப்பினும் நாய்வால்

திருந்துதல் என்றுமோ இல்'

(பழமொழி. 336)

(4) அகப்படுத்தல் - catch

'கண்சிறைப் படுநிழல் காவு

சூழ்ந்தவே' (சீவக. 79: 4)

(ஒப்பு) Prison கட்டுப்பாடு,

குற்றம், கூண்டு , நரகம்,

வரையறை.

சீதை Citai (a lady)

(1) கற்பு - chastity

'தாயைப் போலத் தளர்ந்து

மயங்கினாள் தீயைச் சுட்டது ஓர்

கற்பு எனும் தீயினாள்'

(கம்ப .சுந்.1080: 3-4)

(2) தூய்மை - purity

129