பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீதேவி


'தீயின் தூயவளைத் துயர்

செய்ததால்' (கம்ப.சுந்.1137: 4)

(ஆ) புகழாள் Pukalal

கற்பு - chastity

'ஒன்றுபுரி கற்பொடு உலகு

விளக்குறீஇப் பொன்றல் ஆற்றிய

புகழாள் போல' (பெருங். உஞ்.36:

340-341)

சீதேவி Citévi

(1) சிறப்பு - eminence

தேன்பொழிந்த வாயான்

திருவேங்கடத்துடனே

ஏன்பிறந்தான் கண்ணுக்கு

இனியானே வான்சிறந்த

சீதேவியாருடனே செய்ய

திருப்பாற்கடலில் மூதேவி

ஏன்பிறந்தாள் முன்' (தனிப்.473)

சீரகம் Cirakam

(1) அழிவின்மை (மோட்சம்) - eternity

'.. .. .. மங்காத சீரகத்தைத்

தந்தீரேல் தேடேன் பெருங்காயம்'

(தனிப்.,544: 2-3)

சீவகன் Civakan)

(1) வள்ளன்மை - benevolence

'கார்தங்கு வண்கைக் கழல் சீவகற்

காண்மின் என்றார்' (சீவக.881: 4)

(2) ஒப்பின்மை - incomparable

'அருள்வலி ஆண்மை கல்வி

அழகறி இளமை ஊக்கம் திருமலி

ஈகை பாகம் திண்புகழ் நண்பு

சுற்றம் ஒருவர் இவ்வுலகில் யாரே

சீவகன் ஒக்கு நீரார் பெரிதரிது

இவனைக் கொன்றாய் பெறுகெனச்

சிறப்புச் செய்தான்' (சீவக. 1165)

சுக்கு Cukku

(1) வற்றல் - dry

வெங்காயம் சுக்கானால்

வெந்தயத்தால் ஆவதென்ன

(தனிப்.544: 1)

சுட்டுக்கோல் Cuttukkol

(1) துன்பம், உடனிருப்பு, மெய்யன்பு

- sorrow, true love, co-existant


சுடர்

'சுட்டுக்கோல் போல எரியும்

புகுவரே நட்டார் எனப் படுவார்'

(நாலடி.208: 3-4)

(ஆ) சுட்டுறு கோல் Cuturu kol

துன்பம் - affliction

'இட்டிடர்ப் பொழுதின் இன்ப

நீக்கிக் கட்டழல் புகூஉஞ் சுட்டுறு

கோல் போல் நட்டை இட்டு

நாட்டகம் துறந்துதம்'

(பெருங். இலா.8: 154-156)

சுடர் Cutar (sun)

(1) வெம்மை - hot

'வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல்

வானம்' (நற்.261:3)

(2) கடவுட்டன்மை - divine

‘முந்நீர் மீமிசைப் பலர் தொழத்

தோன்றி, ஏமுற விளங்கிய

சுடரினும்' (நற்.283:6-7)

(3) சினம் - anger

‘சுடர் சினம் தணிந்து குன்றம்

சேர' (குறு.195: 1)

(4) வெப்பம் - heat

'குன்று வறம் கூரச் சுடர் சினம்

திகழ' (பதி.43: 13)

(ஆ) சுடருள் இருள் தோன்றுதல்

Cutarul irul tonrutal

(5) தீமை, துன்பம், வருத்தம் - evil,

Sorrow, affliction

'தொடர் வரை வெற்பன்

துறக்குவன் அல்லன் - தொடர்புள்

இனையவை தோன்றின்,

விசும்பில் சுடருள் இருள்

தோன்றியற்று' (கலி.41: 36-38)

(இ) ஞாயிறு Nayiru

(6) ஒளி, அழகு

'வானம் மூழ்கிய வயங்கு ஒளி

நெடுஞ் சுடர்க் கதிர் காய்ந்து

எழுந்து அகம் கனலி ஞாயிற்று

வைகுறு வனப்பின், தோன்றும்'

(நற்.163:9-11)

(7) வெம்மை

'ஞாயிறு காயும் வெவ்வறை

மருங்கில்' (குறு.58: 3)

(8) தலைவன்


130