பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடர்

ஒளி

‘எல்லை சேறலின் இருள் பெரிது

பட்டன்று ' (குறு.355: 3)

(எ) எல்

(27) அறியாமை - immortal

'அறிவன்று அழகன்று அறிவதூஉம்

அன்று சிறியர் எனப்பாடும்

செய்யும் - எறிதிரை சென்றுலாம்

சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த

என்றூடு அறுப்பினும் மன்று'

(பழமொழி. 60)

(ஏ) கதிர் Katir

(28) அழிவு - ruin, perish

'கண் பொர விளங்கிய கதிர் தெறு

வைப்பின், மண் புரை பெருகிய

மரம் முளி கானம்' (ஐங்.319: 1-2)

சினம்

.. .. முக்கண்ணான்

மூஎயிலும் உடன்றக்கால், முகம்

போல ஒண் கதிர் தெறுதலின்'

(கலி.2: 4-5)

தெறுதல்

'வேரொடு மரம் வெம்ப, விரி

கதிர் தெறுதலின்' (கலி.10: 4)

(29) வலிமை - strong

'உரவுக் கதிர் தெறும் என ஓங்கு

திரை விரைபு' (கலி.127: 20)

(30) ஆற்றல் - power

'நிரை கதிர்க் கனலி பாடொடு

பகல் செல' (கலி.130: 5)

வெப்பம் - heat

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக்

கதிர் தெற, நீள் எரி பரந்த நெடுந்

தாள் யாத்து' (அகம்.51: 1-2)

(31) வறட்சி - drought

மண் பக வறந்த ஆங்கண், கண்

பொரக் கதிர் தெற, கவிழ்ந்த

உலறுதலை நோன் சினை'

(அகம்.81: 6-7)

(ஐ) செங்கதிர்ச் செல்வன்

Ceikatirc celvan

தெறுதல் - bum

'செங் கதிர்ச் செல்வன் தெறுதலின்'

(நற்.164: 2)

சினம், வெம்மை - anger, heat


சுடர்


'செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த

போழ்தினாற் பைங்கொடி முல்லை

மணங்கமழ' (ஐந்.எழு.15: 1-2)

(ஓ) வெங்கதிர்ச் செல்வன்

Venkatirc celvan

ஒளி, நிலைபேறு - light, stable

'அம் கண் விசும்பின் ஆர் இருள்

அகற்றும் வெங்கதிர்ச் செல்வன்

போலவும், .. .. .. நின்று

நிலை இயர் உலகமொடு உடனே'

(புறம்.56: 21-24)

(ஓ) கனலி Kanali

வெம்மை , சினம் - heat, anger

'நெருப்பு அவிர் கனலி உருப்புச்

சினம் தணிய' (ஐங்.388: 1)

தெறுதல் - burn)

'வெந்தெறற் கனலியொடு மதிவலம்

திரிதரும்' (பெரும். 16)

(ஔ) கனலி நான்கு திசைகளிலும்

தோன்றுதல் Kanali nanku ticaikalilum

tonrutal

தீமை (தீ நிமித்தம்) - bad omen

'அலங்குகதிர்க் கனலி நால்வயின்

தோன்றினும் .. .. .. .. உறை

வேண்டு பொழுதில் பெயல்

பெற்றோரே' (புறம்.35: 6,16)

(க) கனலி பலவிடத்தும்

தோன்றுதல் Kanali palavitattum

tonrutal

தீமை, அழிவு - bad omen

'வெங் கதிர்க் கனலி துற்றவும்'

(புறம்.41:6)

(ங) கனலி _தென்திசையில்

தோன்றுதல் Kanali tenticaiyil tonrutal

தீமை - harm

'தெறுகதிர் கனலி தென்திசைத்

தோன்றினும்' (புறம்.397:24)

(ச) காலை Kalai

(32) வாய்மை - truth

'காலை அன்ன சீர்சால்

வாய்மொழி' (பதி.21: 4)

வெம்மை, தீமை


132