பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடர்


'பெயல் மழை புறவு இன்று ஆகி,

வெய்துற்று, வலம் இன்று அம்ம,

காலையது பண்பு! என' (பதி.26:

6-7)

(ஞ) வைகல் Vaikal|

வாய்மை - truth

'வாய்மை வயங்கிய வைகல்'

(பரி.2: 54)

(ட) பருதி அம் செல்வன் Paruti

am celvan

ஒளி

‘பகல் செய் பல் கதிர்ப் பருதி அம்

செல்வன்' (அகம்.229: 1)

(ண) பருதி Paruti

ஒளி

'இருள் கண் கெடுத்த பருதி

ஞாலத்து ' (புறம்.174: 3) (த) இரவி Iravi

வெம்மை

எரிந்து சுடும் இரவி ஈடில்

கதிரான்' (திணைமாலை.75: 1)

(ந) வெஞ்சுடர் Velicutar

தலைவன்

'நண்ணிநீர் சென்மி னமரவ

ராபவே லெண்ணிய வெண்ண

மெளிதரோ - வெண்ணிய

வெஞ்சுடர் அன்னானை

யான்கண்டேன் கண்டாளாம்

தண்சுடர் அன்னாளைத் தான்'

(திணைமாலை.89)

(ப) இரவி மறைதல் Itavi maraital

(33) அச்சம், ஒளித்தல் - fear, hide

'தன் தனிப் புதல்வன் வென்றித்

தசமுகன் முடியில் தைத்த மின்

தளிர்த்தனைய பல்மா மணியினை

வெளியில் கண்டான் ஒன்று

ஒழித்தொன்று ஆம் என்று அவ்

அரக்கனுக்கு ஒளிப்பான் போல

வன் தனிக் குன்றுக்கு அப்பால்

இரவியும் மறையப் போனான்'

(கம்ப யுத்.884)


சுடர்


(ம) இரவு நேரத்தில் சூரியன்

பாதியாகப் பிளவுபட்டுத்

தோன்றுதல் Iravu nerattil curiyan

patiyaka pilavupattut tonrutal

(34) தீமை, அழிவு - bad omen

'வில் பகல் இன்றியே இரவு

விண்டு அற எல் பகல் எறித்துளது

என்னத் தோன்றுமால்'

(கம்ப .சுந்.372: 1-2)

(ய) ஊழ்திரைப் பாம்பு சேர்ந்த

பருதி Ultiraip pampu cernta

(35) கலக்கம் - anxiety, confusion

'தோழரை வடுச்செய்திட்டேன்

என்று தான் துளங்கி நின்றான்

ஊழ்திரைப் பாம்பு சேர்ந்த

ஒளிமிகு பருதி ஒத்தான்'

(சீவக.1138: 3-4)

(ர) கதிரவன் மறைதல் Katiravan

maraital)

(36) துன்பம் - affliction

'கதிரவன் மறைந்தனனே காரிருள்

பரந்ததுவே எதிர்மலர்

புரையுண்கண் எவ்வநீர்

உகுத்தனவே' (சிலப். 7.41)

(ல) கதிரை இருள் விழுங்குதல்

Katirai irul viliikutal

(37) தீமை, அழிவு, அறத்தை மறம்

வெல்லுதல் - bad omen

'கதிரை இருள் விழுங்கக்

காண்பென் காணெல்லா'

(சிலப்.20: 5)

(வ) கதிரவன் முளைத்தல்

Katiravan mulaittal

(38) துயிலெழுப்புதல், ஒளி - awaken

'ஊர் துயிலெடுப்ப உரவு நீர்

அழுவத்துக் காரிருள் சித்துக்

கதிரவன் முளைத்தலும்' (மணி.7:

125-126)

(ழ) கதிரோன் Katiron

துயிலெழுப்புதல் - awake

'உலகு துயிலெழுப்பினன்

மலர்கதிரோன்' (மணி.21: 190)


133