பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வம்

கூழ்எனின் செல்வம் ஒன்றுண்டாக

வைக்கற்பாற் றன்று' (நாலடி.1)

செல்வர் மனம் Celvar Manam

(1) அழகு

'கல்பயில் கானம் கடந்தார் வர,

ஆங்கே நல்லிசை ஏறொடு வானம்

நடுநிற்பச் செல்வர் மனம்போல்

கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்

மேனிபோல் புல்லென்ற காடு'

(கார்.18)

செவ்வல் குன்றம் Cevval Kunram

(1) சிவப்பு நிறம், சிறப்பு, பழமை

.. .. .. தொல்சிறப்பில்

செவ்வல்அம் குன்றம்போல்

தோன்று புனல்நாடன் தெவ்வரை

அட்ட களத்து' (களவழி.10:2-4)

செவ்வழி Cevvali (பண்)

(1) மாலைக்காலம் - evening time

'சேக்கை நல்லியாழ் செவ்வழி

பண்ணி ' (பெருங். உஞ்.33: 89)

சேக்கை (கிளை ) Ctkkai (branch)

(1) உடம்பு - body

'கேளாதே வந்து கிளைகளாய்

இல்தோன்றி வாளாதே போவரால்

மாந்தர்கள் வாளாதே சேக்கை

மரனொழியச் சேண் நீங்கு

புள்போல யாக்கை தமர்க்கொழிய

நீத்து' (நாலடி.30)

சேடம் Cetam

(1) புனிதம், இறைத்தொடர்பு

'செய்தவப் பாவமெல்லாம்

தீர்த்திடும் தீர்த்தன் பாதம்

எய்திய சேடம் கூவித் திறைஞ்சுபு

தொழுது வாழ்த்தி ' (சீவக.821: 1-2)

(ஆ) சேடப்பூ Cetappu

புனிதம்

'இன்னணம் இறைவனை ஏத்தி

ஏந்தறன் சென்னியுள் சேர்த்திய

சேடப் பூவினன்' (சூளா 185: 1-2)

சேயோன் Ceyon)

(1) குறிஞ்சித்திணை


சேயோன்


'சேயோன் மேய மைவரை

உலகமும்' (தொல்.951)

ஆ) முருகு Muruku

(2) வலிமை, சீற்றம்

'முருகு உறழ் முன்பொடு கடுஞ்

சினம் செருக்கி' (நற்.225: 1)

(3) அருள்

என்னை அருளி அருள் முருகு

சூள் சூளின்' (பரி.8: 65)

(4) இனிமை

'உருவ வெண் மணல் முருகு நாறு

தண் பொழில்' (அகம்.137: 8)

(5) சிறப்பு

'உரு கெழு சிறப்பின் முருகு

மனைத் தரீஇ' (அகம். 138: 10)

(6) ஆற்றல்

'முருகு உறழ் முன்பொடு பொருது

களம் சிவப்ப' (அகம்.181: 6)

(7) மேன்மை

முருகு ஒத்தீயே, முன்னியது

முடித்தலின்' (புறம்.56: 14)

(8) இறைமை

'வல்லோன் தைஇய வரிப் புனை

பாவை முருகு இயன்றன்ன

உருவினை ஆகி' (மது.724)

(இ) முருகன் Murukan

சினம்

'சினமிகு முருகன் தண்பரங்

குன்றத்து' (அகம்.59:11)

(9) கடவுட்டன்மை

'அணங்குடை முருகன் கோட்டத்து'

(புறம்.299:6)

(10) உயர்வு

'அரும் பெறல் மரபின் பெரும்

பெயர் முருக!' (திருமுரு.269)

(ஈ) வேள் Vel

(11) வெற்றி

வென்றி நெடுவேள் என்னும்

அன்னையும்' (குறு.111: 2)

சினம்

'கடுஞ் சின விறல் வேள் களிறு

ஊர்ந்தாங்கு' (பதி.11: 6)

(12) வீரம்

'கடம்பு அமர் நெடு வேள் அன்ன.

மீளி' (பெரும்.75)

(13) வளம்


137