பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேறு

வளமை, விடியல், விவேகம்,

விழிப்புணர்வு; எதிர்ப்பு, கழிகாமம்,

தன்முனைப்பு; காட்டிக்கொடுத்தல்,

தீமையை விரட்டுதல்,

தூய்மைப்படுத்தல்,

சேறு Céru

(1) ஈரம் / குளிர்ச்சி

'தண் சேறு தாஅய், மதனுடை

நோன் தாள்

(நற். 8:7)

(2) வளம்

'ஆறு செல் வம்பலர் சேறு

கிளைத்து உண்ட' (அகம்.137:1)

(3) ஆபத்து

'ஆற்ற வினைசெய்தார் நிற்பப்

பலவுரைத்து ஆற்றாதார் வேந்தனை

நோவது- சேற்றுள் வழாமைக்

காத்தோம்பி வாங்கும் எருதாங்

கெழாமைச் சாக்கா டெழல்

(பழமொழி. 313)

(ஆ) அள்ளல் Allal

(4) துன்பம்

'கடும்புனல் தொகுத்த நடுங்கஞர்

அள்ளல்' (குறு. 103:1)

தீமை, பகை

'பகைக் கூழ் அள்ளல் பட்டு, மிகப்

பல் தீ நோய் தலைத்தலைத்

தருமே' (புறம். 185: 5-6)

(இ) அளறு Alaru

(6) நரகம்

'ஒருமைச் செயல் ஆற்றும் பேதை-

எழுமையும் தான் புக்கு அருந்தும்

அளறு' (குறள். 835)

(7) குருதி

'. .. .. .. பறியா நீள் இரும்

பனைமிசைப் பல பதினாயிரம்

குலை தரை உதிர்வபோல .. .. ..

-- .. .. .. .. .. அளறு சொரிபு.

நிலம் சோர' (பரி.2: 43-47)

(8) காம இன்பம்

'படுகடன் ஆதியில் பட்டது

நினையான் தொடுகழல் குருசில்

வடுவுரை நிற்ப இன்ப அளற்றுள்

இறங்கினன் ஆதலின் துன்பம்

துடைத்த தொழிலே போல'

(பெருங். இலா.9: 225-228)

துன்பம்


ஞமலி

கொழுங்களி அளற்றுள் வீழ்ந்தும்

கொழும்புகை மடுக்கப் பட்டும்'

(சீவக.2775.2)

(ஈ) தொளி Toli

(9) வளமை

'உழாஅ நுண்தொளி நிரவிய

வினைஞர் முடிநாறு அழுத்திய

நெடுநீர்ச் செறுவில் (பெரும்.211-

212)

(ஒப்பு) Mud, Marsh, swamp

வளமை, வளர்ச்சியின் தொடக்க

நிலை, இறப்பு, இருள், சுயநலம்,

மயக்கநிலை, வறுமை.

சேனை Cénai (army)

(1) மிகுதி - abundance

வீறுசால் வேந்தன் வினையும்

முடிந்தன; ஆறும் பதமினிய

ஆயின - ஏறொ(டு) அருமணி நாகம்

அனுங்கச் செருமன்னர்

சேனைபோல் செல்லும், மழை'

(கார்.20)

சோதமன் Cotaman (a person)

(1) நடுநிலைமை - neutral

சொரிதரு விசும்பில் சோதமன்

குறுகிப் பாத்தில் பெருமைப்

பரதன் முதலாச் சேய்த்தின்

வந்தநின் குலமும் செப்பமும்'

(பெருங். நர.3: 169: 171)

சோமகுண்டம் Comakuntam (a pond)

(2) மீயாற்றல், கடவுட்டன்மை -

supernatural power, divine

சோமகுண்டம் சூரிய குண்டம்

துறை மூழ்கிக் காமவேள்

கோட்டம் தொழுதார் கணவரொடு

தாம் இன்புறுவர் உலகத்துத்

தையலார்' (சிலப்.9: 59-61)

ஞமலி Namali (dog)

(1) எளிமை - simple

'வன் கைக் கானவன் வெஞ் சிலை

வணக்கி ஊமிசைத் தவிர்த்த


139