பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞமலி

முளவுமான் ஏற்றையோரு

மனைவாய் ஞமலி ஒருங்கு புடை

ஆட' (நற். 285:3-5)

(2) சினம் - angry

'சினவுக்கொள் ஞமலி

செயிர்த்துப்புடை ஆட' (அகம்.

388: 14)

(3) கொலைத்தன்மை - killing

'கூடினர் விடு பகழிகளொடு

கொலை ஞமலிகள் வழுவி'

(பெரிய.738: 5-6)

(ஆ) நாய் Nay

சினம் - angry

'கடுங் குரற் பம்பைக் கத நாய்

வடுகர்' (நற். 212: 5)

(4) கொடுமை - cruel

'கொலை வெங் கொள்கையொடு

நாய் அகப்படுப்ப' (கலி. 23:16) -

(5) வலிமை - strong

'இயல் முருகு ஒப்பினை, வயநாய்

பிற்பட'

(அகம். 118: 5)

(6) விரைவு - quick

'மான் கணம் தொலைச்சிய கடு

விசைக் கதநாய்' (புறம்.205: 8)

(7) காவல் - watch

'தொடர் நாய் யாத்த துன் அருங்

கடி நகர்' (பெரும்.125)

(8) இகழ்ச்சி, இழிவு, தாழ்வு - chide,

despise, lowly

'தாயானும் தந்தையா லானும்

மிக(வு) இன்றி வாயின்மீக் கூறும்

அவர்களை ஏத்துதல் நோயின்(று)

எனினும் அடுப்பின்

கடைமுடங்கும் நாயைப் புலியாம்

எனல்' (பழமொழி.67)

(9) கீழ்மை - meanness, base

'கூர்த்துநாய் கௌவிக்

கொளக்கண்டும் தம் வாயாற்

போர்த்துநாய் கௌவினார்

ஈங்கில்லை - நீர்த்தன்றிக்

கீழ்மக்கள் கீழாய

சொல்லியக்காற் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு'

(நாலடி. 70)

(10) நன்றி, நட்பு, பெருமை, உயர்வு

- gratitude, friendship, greatness,

eminence

'யானை அனையவர் நண்பொரீஇ

நாயனையார் கேண்மை கெழீ இக்


ஞமலி


கொளல்வேண்டும் யானை

அறிந்தறிந்தும் பாகனையே

கொல்லும் எறிந்தவேல் மெய்யதா

வால்குழைக்கும் நாய்' (நாலடி.213)

(11) அறிவிலார் - ignorant -

'கல்லாது நீண்ட ஒருவன்

உலகத்து நல்லறிவாளர்

இடப்புக்கு மெல்ல இருப்பினும்

நாயிருந் தற்றே இராஅது

உரைப்பினும் நாய் குரைத்தற்று'

(நாலடி.254)

(12) அடிமை

'உத்தம அடி நாயேன் ஓதுவது

உளது என்றான்

(கம்ப.அயோ .671: 4)

(13) கேவலம், கீழ்மை

'நாய் தரக் கொள்ளும் சீயம்

நல்லரசு' (கம்ப.யுத்.943: 3)

(14) தொண்டு

'ஆரூரைம் மறத்தற்கு அரியானை

அம்மான் தன்திருப் பேர்கொண்ட

தொண்டன் ஆரூரன் அடி நாய்

உரை வல்லார் அமர லோகத்து

இருப்பவர் தாமே' (சுந்,தேவா,986:

5-8)

(15) தீமை, பொல்லாமை

'நாசனே நான் யாதும் ஒன்று

அல்லாப் பொல்லா நாயான

நீசனேனை ஆண்டாய்க்கு

நினைக்க' (திருவா.5:51.3-5)

(இ) நாய்க்கால் சிறுவிரல் Naykal

ciruviral

(16) நெருக்கம், இழிவு - closeness,

degraded

'நாய்க்கால் சிறுவிரல்போல்

நன்கணியர் ஆயினும் ஈக்கால்

துணையும் உதவாதார்

நட்பென்னாம்' (நாலடி.218: 1-2)

(ஈ) செந்நாய் Sennay

(17) தலைவன்

'ஒய்பசிச் செந்நாய் உயங்குமரை

தொலைச்சி' (நற்.43: 3)

(18) வேட்டை - hunting

வேட்டச் செந்நாய் கிளைத்தூண்

மிச்சில்' (குறு.56: 1)

(ஈ) நாய்வால் Nayval


140