பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞாழல்

(19) அடக்கமின்மை , திருந்தாமை -

immodest, unreformed

'நிறையான் மிகுகல்லா நேரிழை

யாரைச் சிறையான் அகப்படுத்தல்

ஆகா- அறையோ!வருந்த

வலிதினின் யாப்பினும் நாய்வால்

திருந்துதல் என்றுமோ இல்'

(பழமொழி.336)

(உ) சுணங்கன் Sunaikan

(20) ஆசை | பேராசை - desire,

avarice

'பெருகு தெண்கடல் ஊற்றுண்

பெருநசை ஒரு சுணங்கனை ஒக்கும்

தகைமையேன்' (பெரிய.6: 3-4)

(ஊ) ஞமலி நா Namali na

(21) சிவப்பு, மென்மை , அழகு

'இளைப்புறு ஞமலி நலத்தகு

நாவின் செம்மையும் மென்மையும்

சிறந்து வனப்பெய்தி'

(பெருங். இலா. 19: 176-177)

(ஒப்பு) Dog ஆற்றல், உண்மை ,

காவல், தந்திரம், நேர்மை,

பாதுகாப்பு, மீட்பு, வளமை,

விடியல், விழிப்புணர்வு, வேட்டை,

இழிவு, இறப்பு, அடிமைத் தனம்,

இரக்கமின்மை , ஏறுமாறான

பண்பு, சீற்றம், தற்பெருமை

பேசுதல், தன்முனைப்பு, தீமை,

தெருச்சுற்றல், பேராசை,

பொறாமை, போர், பேருண்டி,

மடமை.

ஞாழல் Nalal (a tree)

(1) தலைவி, நறுமணம்

'புது வீ ஞாழலொடு புன்னை

தாஅம் மணம் கமழ் கானல்'

(நற்.167: 8-9)

(2) இன்பம்

'பெருங் கடற்கரையது சிறுவெண்

காக்கை ஒள் இணர் ஞாழல்

முனையின், பொதி அவிழ்

புன்னை அம் பூஞ் சினைச்

சேக்கும் துறைவன்' (ஐங். 169: 1-3)

ஞெகிழி Nekili (fire brand)

(1) ஒளி


ஞெமன்ன் தெரிகோல்


'கானவன் எறிந்த கடுஞ் செலல்

ஞெகிழி வேய் பயில் அடுக்கம்

சுடர மின்னி , நிலை கிளர்

மீனின், தோன்றும் நாடன்'

(நற்.393: 5-7)

(2) காப்பு

'ஏனல் அம் சிறுதினை காக்கும்

சேணோன் ஞெகிழியின்

பெயர்ந்த நெடுநல் யானை

மீன்படு சுடர்ஒளி வெரூஉம்'

(குறு.357:5-7)

ஞெமன்ன் தெரிகோல் Nemann terikol

(balance)

(1) நடுநிலைமை - just, neutral

'... ... ... ... ... .. ஞெமன்ன் தெரி

கோல் அன்ன செயிர் தீர் செம்

மொழி' (அகம். 349: 3-4)

(2) துல்லியம் / சமன் - exact, equal,

unbiased)

'உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்

தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு

திறம் பற்றல் இலியரோ! நின்

திறம் சிறக்க!' (புறம்.6: 8-10)

(ஆ) துலாஅம் Tulaam

(3) நடுநிலைமை / ஒருபாற்கோடாமை

- just, balanced

'புறவின் அல்லல் சொல்லிய, கறை

அடி யானை வால் மருப்பு எறிந்த

வெண் கடைக் கோல் நிறை

துலாஅம் புக்கோன் மருக!'

(புறம். 39: 1-3)

(இ) ஞெமன் கோல் Neman kol

(4) நடுநிலைமை

'ஞெமன் கோல் அன்ன செம்மைத்து

ஆகி, சிறந்த கொள்கை அறம் கூறு

அவையமும்' (மது.491-492 )

(ஈ) சமன் செய்து சீர் தூக்கும்

கோல் Caman ceytu cir tukkum kol

(5) நடுநிலைமை

'சமன் செய்து சீர் தூக்கும்

கோல்போல் அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.'

குறள். 118)

(உ) Cinirai kil


141