பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையில் சூட்டப்பட்ட..


வன்மையைப் பாடிப் பற'

(நாலா.309: 3-4)

தலையில் சூடப்பட்ட மலர்கள்

நிலத்தில் உதிர்தல் Talaiyil

cutappatta malarkal nilattil utirtal

(1) துன்பம், இறப்பு, நிலையாமை

'தாதின வினமலர் பலவும்

தலையன நிலமிசை உதிர .. .. ..

வேதனை பெரிதுடைத்து அடிகள்

விளிகவிப் பிறப்பென

உரைத்தாள்' (நீலகேசி.73: 2,4)

தலையில் சூட்டப்பட்ட மாலை சரிதல்

Talaiyil cuttappatta malai carital

(1) தீமை

'சீர் அலங்காரச் சித்திர

முடிமிசைத் தாரணி கோதை

தாழ்ந்து புறத்தசைய'

(பெருங். மகத.24: 185-186)

தவ்வை Tavvai

(1) வறுமை - poverty

'அவ்வித்து அழுக்காறு

உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்'

(குறள்.167)

(ஆ) முகடி Mukati

சோம்பல்

மடி உளாள் மா முகடி என்ப மடி

இலான் தாள் உளாள்

தாமரையினாள்' (குறள். 617)

தவசியர் Tavaciyar

(1) பொலிவு - radiance

'நீடிய சடையோடு ஆடா மேனிக்

/குன்று உறை தவசியர் போல,

பலவுடன் என்றுழ் நீள் இடைப்

பொற்பத் தோன்றும்' (நற். 141:4-6)

தளவம் Talavam (a creeper)

(1) நறுமணம்

'தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி

முல்லை முகை தலை திறந்த

நாற்றம் புதல்மிசைப் பூஅமல்


தளிர்


தளவமொடு, தேம் கமழ்பு கஞல்'

(குறு, 383:1-3)

(2) அழகு

'காயா, கொன்றை, நெய்தல்,

முல்லை, போதவிழ் தளவமொடு

பிடவு, அலர்ந்து கவினிப் பூ

அணி கொண்டன்றால் புறவே'

(ஐங், 412:1-3)

(3) கார்காலம்

'தண் பெயல் அளித்த பொழுதின்

ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும்

உடைத்தே ' (ஐங்.440: 2-3)

(ஆ) தளவு Talavu

(7) தண்மை , தலைவி

‘எல்லை தருவான் கதிர்பருகி

ஈன்றகார் கொல்லைதரு

வான்கொடிகள் ஏறுவகாண்

முல்லை பெருந்தண் தளவொடுதம்

கேளிரைப்போல் காணாய்

குருந்தம் கொடுங்கழுத்தம்

கொண்டு' (திணைமாலை.105)

தளிர் Talir (leaf sprout)

(1) அழகு

'அடைகரை மாஅத்து அலங்கு

சினை பொலியத் தளிர் கவின்

எய்திய தண் நறும் பொதும்பில்'

(நற். 118:1-2)

(2) மென்மை

'துளிதலைத் தலை இய தளிர்

அன்னோளே'

(குறு. 222:7)

(3) தண்மை

'அந்தண் தளிர வௌவும் மேனி'

(ஐங். 38:3)

(8) இளமை - young age

'தாஞ்சால வாழ்நாள் தளிர் ஈனும்

தகைய துண்டு ' (நீலகேசி.10: 3)

(ஆ) குறுமுறி Kurumuri

(4) பிறப்பு, உயிர்ப்பு - birth, alive

"குறு முறி ஈன்றன. மரனே' (அகம்.

259:1-4)

(இ) எரியுறு தளிர் Eriyuru talir

(6) துன்பம் - grief


145