பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாமரை


'விரைசெய் தாமரை மேல்

விளையாடிய அரைச அன்னம்

அமர்ந்துள ஆயினும்' (சீவக. 1401:

1-2)

(ஆ) தாமரையினாள் Tamaraiyinan

(16) செல்வம்

மடி உளாள் மா முகடி என்ப மடி

இலான் தாள் உளாள்

தாமரையினாள்' (குறள். 617)

(இ) தாமரைப் போது Tamaraip

potu)

(17) குழவி - child

'தண் கதிர் மதாணி, ஒண்

குறுமாக்களை ஓம்பினர்த் தழி இ,

தலம் புணர்ந்து முயங்கி, தாது

அணி தாமரைப் போது

பிடித்தாங்கு தாமும் அவரும்

ஓராங்கு விளங்க' (மது. 461-464)

(ஈ) பொற்றாமரை Poramarai

(18) சிறப்பு - splendor

எரி அகைந்தன்ன ஏடு இல்

தாமரை சுரி இரும் பித்தை

பொலியச் சூட்டி' (பொரு.159-160)

(உ) கடவுள் ஒண் பூ Katavul on

pu

(19) தெய்வத்தன்மை - divine

'நீத்துடை நெடுங் கயம் தீப் பட

மலர்ந்த கடவுள் ஒண் பூ

அடைதல் ஓம்பி'

(பெரும். 289-290)

(ஊ) அழல் முளரி (நெருப்புத்

தாமரை) alal mulari

(20) இல்லாதது, அரியது - unknown,

unusual, rare

'ஆரழல் முளரி அன்ன அருந்தவம்

அரிது' (சீவக.2632: 1)

(எ) கமலம் Kamalam

தெய்வத்தன்மை - divine -

'புல்லிதழ் கமலத் தெய்வ பூவிற்கும்

உண்டு பொற்பின்' (கம்ப.கிட்.797:

1)


தாமரை


(ஏ) கமலப்பூ Kamalappu

நறுமணம்

'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ

நாறுமோ ' (நாலா.567: 1)

(ஐ) நாற்ற மலர் Narra malar

(21) அயன்

'நாற்ற மலர்மேல் அயனும்

நாகத்தில் ஆற்றல் அணைமேல்

அவனும் காண்கிலா'

(திருஞான தேவா.31: 1-2)

(ஓ) மலராத தாமரை Malarata

tamarai

(22) மகப்பேறின்மை

தொக்கிள மலர் துதைவிலாத

சோலையும் புக்கிளம் தாமரை

நகாத பொய்கையும் மிக்கிளம்

பிறை விசும்பிலாத அந்தியும்

மக்களை இலாததோர் மனையும்

ஒக்குமே' (சூளா.413)

(ஓ) ஆயிரம் இதழ்த் தாமரை

Ayiram italt tamarai

உதயணன் கனவின் பயன் -

Utayanan's dream

ஆயிர நிரைத்த வாலிதழ்த்

தாமரைப் பூவெனப் படுவது

பொருந்திய புணர்ச்சிநின்

தேவியா குமதன் றாதக டுரிஞ்சி

முன்றாண் முடக்கிப் பின்றா

ணிமிர்த்துக் கொட்டை மீமிசைக்

குளிர்மதி விசும்பிடை எட்டு

மெய்யோடு இசைபெறக் கிடந்த

விள்ளா விழுப்புகழ் வெள்ளேறு

என்பதை முகனமர் காதனின்

மகனெனப் படுமது'

(பெருங்.வத்.5: 109-116)

(ஒப்பு) Lotus அழகு,

அறிவாளி, அமைதி, இதயம்,

இருக்கை , ஆன்மீகம், உறுதி,

உயிர்ப்பாற்றல், இளமை,

ஆண்மை , ஒளி, கருப்பை ,

சூரியன், செல்வச் செழிப்பு

தூய்மை , தெய்வத்தன்மை,

நிலைபேறு, நெருப்பு, நெஞ்சுரம்,

படைப்பு, பயனிறைவு, பெண்பால்,

பெண்ணியல்பு, பிறப்பு,


147