பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திங்கள்

தானே சிறியார் தொடர்பு'

(நாலடி.125: 2-4)

(ஏ) இருள் மதி Inal mati

(29) இல்லாதாதல், குறைதல்,

சுருங்குதல் - non existant, disappear,

reduce, thin

"மதி நிறைவு அழிவதின், வரவு

சுருங்க; எண் மதி நிறை, உவா

இருள் மதி போல நாள்

குறைபடுதல் காணுநர் யாரே?'

(பரி, 11:36-38)

(30) நிலையாமை, மாற்றம்

"குணமுதல் தோன்றிய ஆர் இருள்

மதியின் தேய்வன கெடுக, நின்

தெவ்வர் ஆக்கம்' (மது. 195-196)

(ஐ) உவவுமதி Uvavumati

(31) கடவுட்டன்மை - divine

'முந்நீர் நாப்பண் திமில் சுடர்

போல செம்மீன் இமைக்கும்

மாக விசும்பின் உச்சி நின்ற உவவு

மதி கண்டு, கட்சி மஞ்ஞையின்

சுரமுதல் சேர்ந்த, வளை விறலியும்,

யானும், வல் விரைந்து

தொழுதெனம் அல்லமோ, பலவே'

(புறம், 60: 1-6)

(ஓ) பிறை Pirai

(32)நட்பு - friendship

'நிரை நீர நீரவர் கேண்மை

பிறைமதி பின்நீர பேதையார்

நட்பு' (குறள்.782)

(32) வளர்ச்சி, நட்பு - growth,

friendship

'பெரியவர் கேண்மை பிறைபோல

நாளும் வரிசை வரிசையா நந்தும்'

(நாலடி.125: 1-2)

(33) அழகு

'அறைக்கல் இறுவரைமேல் பாம்பு

சவட்டிப் பறைக்குரல் ஏறொடு

பௌவம் பருகி, உறைத்து இருள்

கூர்ந்து அன்று வானம்

பிறைத்தகை கொண்டன்று பேதை

நுதல்' (கார். 17)

(34) காலம் - time

'மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக்

காவுளான் சடையும் பிறையும்

சாம்பல் பூச்சும் கீழ் உடையும்


திங்கள்


கொண்ட உருவம் என்கொலோ'

(திருஞான. தேவா.23)

(35) ஒளி, பெருகுதல்

'சுருக்கம் இன்றிச் சுடர்ப்பிறை

போல பெருக்கம் வேண்டிப்

பெருநில மன்னவன்'

(பெருங்.இலா.6: 35-36)

(36) வளைவு

'கூனல் இளவெண் பிறைச்

சடையார்' (பெரிய,3362:3)

(37) வெண்மை | இளமை | தண்மை

'செவ்வான் அடைந்த பசுங்கதிர்

வெள்ளைச் சிறுபிறைக்கே'

(திருக்கோ .8: 67: 4)

(38) தேய்பிறை - அழிதல்

மெய்யருக்குப் பொய்யுரைத்தால்

தேய்பிறைபோல் தவம்குறையும்

மிடி உண்டாகும்' (தனிப்.490: 3-4)

(ஓ) தண்சுடர் Tancutar

(39) தலைவி

'நண்ணிநீர் சென்மி னமரவ

ராபவே லெண்ணிய வெண்ண

மெளிதரோ - வெண்ணிய

வெஞ்சுடர் அன்னானை

யான்கண்டேன் கண்டாளாம்

தண்சுடர் அன்னாளைத் தான்'

(திணைமாலை.89)

(ஔ) கதிரோன் எழ மழுங்கிய

மதி Kariron ela malunkiya mati

(40) அழிவு

'கதிரோன் எழ மழுங்கிக் கால்

சாயும் காலை மதிபோல் அழிந்து

பொறா மற்றவனும் சுற்ற'

(பெரிய.615: 1-4)

(க) கோள் நின்ற மதியம்

(கிரணத்தால் பீடிக்கப்பட்ட

உவாமதி) Kol ninra matiyam

(41) பொலிவின்மை

'கோள் நின்ற மதியம் போலக்

குழைமுகம் சுடரக் கோட்டி'

(சூளா .982: 1)

(ங) மதியம் Matiyam

கடவுட்டன்மை

'உலகு தொழத் தோன்றிய

மலர்கதிர் மதியம்' (சிலப்.28: 39)

வெண்மை


151