பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திசைகள் எரிதல் தன்மையண், மணநாள்,

'வெள் எயிற்று இலவச் செவ்வாய்

முகத்தை வெண் மதியம் என்று'

(கம்ப பால,745; 1)

(ச) வெண்மதி Venmati

(43) அறியாமை

'கள் மதியாதது எக்காரியமே

இன்ன வண்மதியாயை விலக்குநர்

யாரோ ' (நீலகேசி.608: 3-4)


(ஒப்பு) Moon அன்பு, அரசியல்

மெய்ஞ்ஞானி, அனுமதி, இசை,

ஈரத்தன்மை, உணர்ச்சிகள், ஒளி,

கிறித்துவின் புனிதத்தன்மை,

குளிர்ச்சி, கோள், கற்புடைமை,

கடமையிற் சிறந்த கணவன்

மனைவி, காலந்தவறாமை,

சிந்தனை, சீர்திருத்தவாதி,

தன்னடக்கம், தூய்மை , தூய

அகநிலை, தூய ஆன்மா , தனிமை,

துறவி, நடுவுநிலைமை, நாள்,

நினைவு, நிறம் மாறும் மணிவகை,

பயணம், பெண், படித்தவன்,

பெருக்கத்தன்மை, மெய்யுணர்வு,

மாறும் இயல்பு, முத்து, வளர்ச்சி,

வெண்மை, வெள்ளி உலோகம்,

விருப்பம், வளமை, வணிகர்,

விவேகம், அறியாமை, ஆபத்தான

வழி, இறப்பு, இருள், அக்கறை

இன்மை, அறிவுக்கோளாறு, இருண்ட

மற்றும் பழி சூழ்கிற நிலை,

கர்மவினை, கேடு, சோம்பல்,

சார்புத்தன்மை, தீமை, துயர்,

தேய்வு, நிலையாமை,

பூண்டோடொழித்தல், மயக்க நிலை,

மாயவித்தை , மலடு, மிகுகாலம்,

முட்டாள்.

திசைகள் எரிதல் Ticaikal erital

(directions burning)

(1) தீமை, அழிவு

'.. .. .. எரிந்திடும் பெருந்திசை

எவர்க்கும்' (கம்ப ஆரண்.431:3) -

திட்டிவிடம் Titivitam (a poison)

(poisonous snake)

(1) தீமை, இறப்பு - vile, death

'திட்டி விடமுணச் செல்லுயிர்

போவுழி' (மணி. 11: 100)


திமில்


திமில் Timil (boat)

(1) திண்மை - strong

'வளை நீர் வேட்டம் போகிய

கிளைஞர் திண் திமில் எண்ணும்

தண் கடற் சேர்ப்ப ' (நற். 331:7-8)

(2) விரைவு - quick

'கடுஞ் செலல் கொடுந் திமில்

போல' (அகம்.330: 16)

(ஆ) நாவாய் -Navay

(3) பயணம் - voyage / journey

'தாம் வேண்டும் பட்டினம் எய்திக்

கரை சேரும் ஏமுறு நாவாய் வரவு

எதிர்கொள்வார்போல்'

(பரி.10: 38-39)

(4) பெரும் வளம் - treasures

'ஆடு இயற் பெரு நாவாய்' (மது.83)

விரைவு

'கடுவிசை நாவாய் கரையலைக்கும்

சேர்ப்ப ' (நாலடி.224: 2)

(5) வளைவு - curved

'நாவாய பிறைச்சென்னி நலம்

திகழும் இலங்கிப்பி'

(திருஞான. தேவா. 1830: 1-2)

(இ) புணை Punai (float)

(6) உய்வு , நன்மை - saved, benefit

'கரை காணாப் பௌவத்து, கலம்

சிதைந்து ஆழ்பவன் திரை தரப்

புணை பெற்று, தீது இன்றி

உய்ந்தாங்கு' (கலி.134: 24-25)

(7) அறம் - virtue

'அறம் புணையாகலும் உண்டு'

(கலி, 144:48)

(8) பாதுகாப்பு - safety / support

‘பிரிந்தவர்க்கு நோய் ஆகி,

புணர்ந்தவர்க்குப் புணை ஆகி'

(கலி. 148:18)

(9) நன்மை - goodness

'தீது இன்றாக, நீ புணை புகுக!

என' (அகம்.392: 8)

(10) வாழ்க்கை - life

'நீர் வழிப்படூ உம் புணை போல்,

ஆர் உயிர் முறை வழிப்படூ உம்

(புறம்.192: 9-10)

(11) பிடிப்பு, காப்பு - hold / grip,

security

'புணை கைவிட்டோர்க்கு அரிதே

(புறம்.357:7)


152