பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லை

(6) வெண்மை

'வெண்திரை முந்நீர் வளைஇய

உலகத்து' (பதி. 31:21)

{7) பெருகுதல் - increase, abound

'வளர் திரை மண்ணிய கிளர்

பொறி நாப்பண்' (பரி. 2:32)

(8) அழகு

'நீல் நீர் உடை போல, தகை பெற்ற

வெண் திரை' (கலி, 124:3)

(9) துன்பம்

'யாமத்தும் எல்லையும் எவ்வத்

திரை அலைப்ப' (கலி. 139:14) -

(10) அளவின்மை - unmeasurable

வரை அளந்து அறியாத் திரை அரு

நீத்தது' (புறம். 238:18)

(ஆ) அலை Alai

வளம்

'நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய

வாளை, வித்தி அலையில்,

விளைக பொலிக என்பார்'

(பரி. 10: 85-86)

(ஒப்பு) Wave ஆடல், கனவுகள்

தூய்மை , நீதி, பெண்மை,

மறுபிறப்பு, இறப்பு.

தில்லை Tillai (a town)

(1) வளம்

'தில்லை வேலி இவ் ஊர்க்

கல்லென் கௌவை எழா அக்காலே'

(ஐங். 131:2-3) |

(2) அறிவு

'அறிவின் எல்லை ஆய திருத்

தில்லை எல்லை அமர்ந்திறைஞ்சி'

(பெரிய 3813: 1-2)

(3) புகழ்

'மன்றுபுகழ்த் திருத்தில்லை

மன்றாடும் மலர்ப்பாதம்'

(பெரிய.4208: 5-6)

தில்லை அம்பலம் Tillai ampalam (a

temple)

(1) அழகு

'ஆலத்தினால் அமிர்தாக்கிய

கோன் தில்லை அம்பலம்போல்

கோலத்தினாள் பொருட்டாக

அமிர்தம் குணம்கெடினும்'

(திருக்கோ .2: 27.1-2)


தீ


திலகம் Tilakam (mark on forehead)

(1) வனப்பு | அழகு

“திலகம் தைஇய தேம் கமழ் திரு

நுதல்' (நற், 62:6)

(2) மங்கலம்

'நல் நுதல் நீத்த திலகத்தள்' (கலி.

143:3)

(3) உயர்வு, சிறப்பு, பெருமை

'மறந்து மழைமறா மகத

நன்னாட்டுக்கு ஒரு பெருந்

திலகமென்று உரவோர் உரைக்கும்'

(மணி.26: 42-43)

(4) முதன்மை - important

'திலகமாய திறலோய் நீ தேவர்

ஏத்தப் படுவோய் நீ' (சீவக.1244:

2)

தினை Tinai

(1) பலி - sacrifice

'உருவச் செந்தினை குருதியொடு .

தூஉய்' (பதி. 19:6)

(2) சிறிய அளவு - small measure

'கிளை மலி சிறு தினைக் கிளி

கடிந்து அசைஇ'

(நற். 25:6)

தீ Ti (fire)

(1) ஒளி - light

'மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில்

பொத்திய சிறு தீ விளக்கில்

துஞ்சும்' (நற். 175:3-4)

(2) தெறல், வெம்மை

'தீ உமிழ் தெறலின்

வெய்தாகின்றே ' (நற். 236:2)

(3) வலிமை

'தீ' ஓரன்ன என் உரன்

அவித்தன்றே ' (குறு. 95:5)

(4) வளம்

'நெய்பெய் தீயின் எதிர்கொண்டு,

தான் மணந்தனையம் என விடுகம்

தூதே ' (குறு. 106:5-6)

(5) துன்பம், நடுக்கம்

'தீ உறு தளிரின் நடுங்கி'

(குறு. 383:5) |

(6) சிவப்பு

'இலை இல மலர்ந்த ஓங்கு நிலை

இலவம் மலை உறு தீயின்

சுரமுதல் தோன்றும்' (ஐங். 338:2-3)

(8) வெளிப்படை - open


156 -