பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீ


வெம்மை

'அறந்தாங்கும் அளவு இன்றி, அழல்

அன்ன வெம்மையால்' (கலி, 11:6)

காமம்

'அழல் மன்ற, காம அரு நோய்'

(கலி. 139:30)

ஒளி

'முளரித் தீயின் முழங்கு அழல்

விளக்கத்து' (அகம். 301:13)

(20) இறப்பு

'கரி புற விறகின் ஈம ஒள் அழல்'

(புறம். 231:2)

துன்பம்

'அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு

கடுத்திறல் பாம்புபடப் புடைக்கும்'

(திருமுரு. 149-150)

(ஊ) நெருப்பு Neruppu

சிவப்பு

நெருப்பின் அன்ன செந்தலை

அன்றில்' (குறள். 160:1)

சினம்

'நெருப்பு அவிர் கனலி உருப்புச்

சினம் தணிய' (ஐங். 388:1)

(21) அழகு

'முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு

உறழ் அடைகரை' (பதி. 23:20)

(22) தீமை

'நெருப்புக் கை தொட்டவர் போல

விதிர்த்திட்டு' (கலி, 115:11)

(23) வலிமை

'பொன் சுடு நெருப்பின் நிலம்

உக்கென்ன' (மது. 682)

(24) அழிவின்மை

'நிலனும் நீரும் மாய் நெருப்பும்

காற்றும் என்று உலைவு இல் பூதம்

நான்கு உடைய ஆற்றலான்'

(கம்ப கிட்,116: 1-2)

(எ) நீர் அடு நெருப்பு Nir atu

neruppu

(25) தணிதல் | அழிதல்

'நீர் அடு நெருப்பின் தணிய'

(நற். 154:9)

(ஏ) ஊழி எரி Ull tri (aeonian fire)

(26) கொடுமை

'ஊழி எரி கொடிய பாய் பகழி

ஒன்பான்' (கம்ப.ஆரண்.532: 1)


தீ


(ஐ) எரி புகுதல் Eri pukutal

(27) உயர்வு | ஏற்றம்

'முளியெரிப் புகூஉ முதுகுடிப்

பிறந்த பத்தினிப் பெண்டிர்

அல்லேம்' (மணி.18: 14-15)

(28) கைம்மை - widowhood

‘நெறியினால் நோற்றல் ஒன்றோ

நீள் எரி புகுதல் ஒன்றோ

அறியலென் கொழுநன் மாய்ந்தால்

அணி சுமந்திருப்பது என்றான்'

(சீவக. 1706: 3-4)

(29) பாண்டிய மன்னன் நெருப்பில்

முழுகுதலும், அதன்பின் எழுதலும்

Pantiya mannan neruppil mulukutalum,

atanpin elutalum (immersion in fire)

தீமையும் துன்பமும் நீங்குதல் |

நோய்நீக்கம் - removal of affliction

| disease

'கோனவன் தானும் வெய்ய

கொழுந்தழல் முழுகக் கண்டோம்,

ஆனபின் எழவுங் கண்டோம்

அதிசயம் இதுவாம் என்பார்'

(பெரிய,2542: 5-8)

(ஓ) காடு கவர் தீ Katu kavar ti

(forest fire)

சினம்

'காடுகவர் தீயின் மிகை சீறுபு

வெகுண்டான்' (சீவக.281:4)

(ஓ) சுடரேந்தி வலன் சுழல்வது

Cutarenti valan culalvatu (waving the

torch to the right)

(29) நன்மை

'கந்துள் உமிழும் கரிய

சூழ்புகைகள் விம்ம வந்துசுடர்

ஏந்திவலனே சுழல மாட்டி'

(சூளா.1101: 1-2)

(ஔ) விறகில் தீ Virakil fi

(30) இறைமை, மறைந்து உறைதல்,

உட்படுதல்

'விறகில் தீயினன் பாலில் படு

நெய் போல் மறைய நின்றுளன்

மாமணிச் சோதியான்'

(திருநா தேவா.30: 1-2)

(க) தழலில் முழுகல் Talalil

mulukal


158