பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீ வலம் வருதல்


(33) வெப்பு நோய்

'கோனவன் தானும் வெய்ய

கொழுந்தழல் முழுகக் கண்டோம்

ஆனபின் எழவும் கண்டோம்

அதிசயம் இதுவாம் என்பார்'

(பெரிய 2542: 5-8)

(ங) தழலிலிருந்து எழுதல்

Talaliliruntu elutal

(34) நோய் நீங்கல்

'கோனவன் தானும் வெய்ய

கொழுந்தழல் முழுகக் கண்டோம்

ஆனபின் எழவும் கண்டோம்

அதிசயம் இதுவாம் என்பார்'

(பெரிய 2542: 5-8)

(ச) புனல் படு நெருப்பு Punal

patu atuppu

(35) அவிதல், குளிர்தல்

'முகைத்தார் வேந்தற்கு முகத்தெழு

பெருஞ்சினம் புனல்படு

நெருப்பில் பொம்மென உரறி

ஆறிய வண்ண மணிமுக நோக்கி'

(பெருங். உஞ்.47: 128-130)

(ஒப்பு) Fire அறிவாற்றல்,

அதிகாரம், இதயம், உள்ளுணர்வு,

எளிமை, ஒளி, கன்னிமை,

கிளர்ச்சி, கோடைக்காலம்,

சொல்லாற்றல், சிவப்பு நிறம், தன்

விருப்ப நிலை, தூய்மைப்படுத்தல்,

தியாகம், தீவிர ஆர்வம்,

துடிப்புள்ள தன்மை, தெற்கு திசை,

தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, நன்

மனப்பாங்கு, நண்பகல், நிலைபேறு,

நீடிப்பாற்றல், பண்புயர்வு,

பாலியல்பு, மறுபிறப்பு, வளமை,

வலிமை, வாழ்வில் விடா உறுதி

வாய்ந்த தன்மை, வாழ்வின்

பேரார்வம், வெப்பம், அபாயம்,

அழிவு, கலகம் செய்கிற குணம்,

சட்ட விரோதமான உணர்வுகள்.

தீ வலம் வருதல் Ti valam varutal

(1) திருமணம்

'வாய் நல்லார் நல்ல மறை ஓதி

மந்திரத்தால் பாசிலை நாணல்

படுத்துப் பரிதி வைத்து காய் சின

மா களிறு அன்னான் என்


தீவளி


கைப்பற்றி தீ வலம் செய்யக்

கனாக் கண்டேன்' (நாலா.562)

தீபமாமரம் Tipamamaram

(1) ஒளி

'செந்தழல் ஒளியில் பொங்கும் தீப

மாமரங்களாலும்' (பெரிய, 780: 1-2)

தீய புள்ளினம் தம்முள் பூசலிடல்

Tiya pullinam tammul pucalital

(1) தீமை, கேடு, அழிவு

'பள்ளிகள் மேலும் மாடு பயில்

அமண் பாழிமேலும் ஒள்ளிதழ்

அசோகின் மேலும் உணவுசெய்

கவளங்கையில் கொள்ளு

மண்டபங்கள் மேலும் கூகையோடு

ஆந்தை தீய புள்ளினமான தம்மிற்

பூசலிட்டு அழிவு சாற்றும்'

(பெரிய,2535)

தீயில் காய்ப்புண்ட செம்பு Tiyil

kayppunta cempu

(1) சிவப்பு நிறம்

தேய்ப்புண்ட தம்பியர்க்கை

சிவப்புண்ட கண்கள் தீயில்

காய்ப்புண்ட செம்பின் தோன்ற

கறுப்புண்ட மனத்தன் கண்டான்'

(கம்ப.சுந்.1001:3-4)

தீயில் மூழ்குதல் Tiyil mulkutal

(1) துன்பம்

'தாயர் தவ்வையர் தன் துணைச்

சேடியர் ஆயம் மன்னிய அன்பினர்

என்று இவர் தீயில் மூழ்கினர்

ஒத்தனர் செங்கணான்'

(கம்ப.அயோ .516: 1-3)

தீர்வை (கீரி) Tirvai (mongoose)

(1) வலிமை - strength

'அரவுக் குறும்பு எறிந்த சிறுகட்

தீர்வை ' (மலை . 504)

தீவளி Tivali (cyclone)

(1) அழிவு, கொடுமை - destruction,

cruel

'.. .. .. .. கலநலத்தைத் தீவளி

சென்று சிதைத்தாங்குச்


159