பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பி


வேட்கையால் வண்டு வழிபடரும்

வாட்கண்ணாய்! தோற்பன

கொண்டு புகாஅர் அவை '

(பழமொழி, 17)

(9) திரிதல்

'உண்டாய போழ்தின் உடைந்துழிக்

காகம்போல் தொண்டா யிரவர்

தொகுபவே; வண்டாய்த் திரிதரும்

காலத்துத் தீதிலிரோ என்பார்

ஒருவரும் இவ்வுலகத் தில்'

(நாலடி.284)

(10) மயக்கம்

'மாதரார் கண்ணு மதி நிழல்

நீரினைக் கொண்டு மலர்ந்த நீலப்

போது மறியாது வண்டூசலாடும்

புகாரே எம்மூர்' (சிலப். 7.6)

(11) காமுகர்

'பசைந்துழிப் பழகல் செல்லாது

பற்றுவிட்டு உவந்துழித் தவிராது

ஓடுதல் காமுறும் இளையோர்

உள்ளம் போலத் தளையவிழ்ந்

தூதுமலர் ஒழியத் தாதுபெற

நயந்து கார்ப்புன மருங்கின்

ஆர்த்தனை திரிதரும் அஞ்சிறை

அறுகால் செம்பொறி வண்டே'

(பெருங். மகத.1: 169-174)

(12) நாண்

'கற்பெனும் மாலை வீசி

நாணெனும் களிவண்டு ஓப்பி'

(சீவக.2073: 3)

(13) மேன்மை

'நிலத்துறும் கமலத்தை நேடும்

வண்டது ஈ தலைக்குறை

கமலத்தைச் சாரும் தன்மைபோல்'

(தனிப்.31: 3-4)

(14) கருமை

'வண்டு ஒத்து இருண்ட

குழல்வாராய்' (நாலா. 168: 4)

(ஈ) வண்டு தாதுண்ணல் Vantu

tatunnal

(15) இன்பம் துய்த்தல் - enjoyment

'தகை வண்டு புதிது உண்ணத் தாது

அவிழ் தண் போதின்' (கலி. 17-15)

(உ) சிதடி (சிள்வண்டு ) Citati

(cicoda)

(16) வறட்சி - drought

'அலந்தலை உன்னத்து அம் கவடு

பொருந்திச் சிதடி கரைய, பெரு


தும்பி


வறம்கூர்ந்து, நிலம் பைது அற்ற

புலம் கெடு காலையும்'

(பதி, 23:1-3)

(ஊ) ஞிமிறு Nimiru

(17) அழகு, ஒலி - beauty, noise

'வண்ணம் நீவி, வகை

வனப்புற்ற, வரி ஞிமிறு இமிரும்

மார்பு பிணி மகளிர்'

(பதி. 50:17-18)

(எ) அரி Ari

தலைவன் - hero

'பூ வீழ் அரியின் புலம்பப்

போகாது, யாம் வீழ்வார், ஏமம்

எய்துக!' (பரி. 11:118-119)

(ஏ) தாதுதேர்பறவை Taruter paravai

தலைவன் - hero

'........... தாம் தம் நலம், தாது தேர்

பறவையின் அருந்து, இறல்

கொடுங்கால்' (கலி, 27:6-7)

(ஐ) அறு காற் பறவை Aru kir

paravai

(18) முகர்ச்சி - smelling/ obfactory

'நாற்ற நாட்டத்து அறு காற் பறவை'

(புறம். 70:11)

(ஓ) வண்டினம் Vantinam

(19) இரவலர்

'உறியோர்க்கு உதவுதல் செல்லாது

ஒய்யெனச் சிறியோர் உற்ற

செல்வம் போலப் பொருசிறை

வண்டினம் பொருந்தாது மறக்க'

(பெருங். இலா.14: 32-34)

(ஒப்பு) Bee, Beetle அன்பு,

ஆன்மா , இடபராசி,

இயல்புணர்ச்சிக் கட்டளை, ஒற்றுமை,

கடும் உழைப்பு, கற்பு, கவர்ச்சி,

காதல், கீழ்ப்படிதல், கூட்டு

வாழ்வுக்குழு, கிறித்து,

சொல்வன்மை, சுறுசுறுப்பான

உழைப்பு, தன்னடக்கம், தூய்மை,

நன்மை, நிலைபேறு, பணித்துறை

ஆட்சி, படைப்புச்செயல், பாலியல்


161