பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பை

சாரா இனப்பெருக்கம், மகிழ்வுடன்

பணியாற்றுதல், மீட்பு ,

முன்னறிவித்தல், வளமை,

விடாமுயற்சி, விவேகம், இறப்பு,

குருடன், சிறுமை, சூரியனின்

மறைவு, நாணம், பில்லிசூனியம்,

போலிப்புகழ்ச்சி, முட்டாள்,

வனதேவதைகள்.

தும்பை Tumpai (a flower)

(1) நெய்தல் திணை, போர் -

Seashore, war

'தும்பைதானே நெய்தலது புறனே

மைந்து பொருளாக வந்த

வேந்தனைச் சென்றுதலையழிக்கும்

சிறப்பிற்றென்ப'

(தொல். 1015, 1016)

(2) போர் - war

‘துப்புத் துறைபோகிய

வெப்புடையத் தும்பை ' (பதி, 39:3)

(3) வெற்றி - victory

'மை அணிந்து எழுதரு மா இரும்

பல் தோல் மெய் புதை அரணம்

எண்ணாது, எஃகு சுமந்து, முன்

சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்

தொலையாத் தும்பை தெவ்வழி

விளங்க, உயர்நிலை உலகம்

எய்தினர்' (பதி. 52:5-9)

(4) சிறப்பு - magnificent

'விழுமிய வீழ்ந்த குரிசிலர்த்

தம்மின்; புரையோர்க்குத் தொடுத்த

பொலம் பூந் தும்பை ' (மது.736-737)

தும்மல் Tummal (sneeze)

(1) குறிப்பின்மை, அடங்காமை,

எதிர்பாராமை- unespected, uncontrolled

'மறைப்பேன்மன் காமத்தை யானோ

குறிப்பு இன்றித் தும்மல்போல்

தோன்றிவிடும்' (குறள். 1253)

(2) வாழ்த்து - bless

'ஊடி இருந்தேமா தும்மினார் யாம்

தம்மை நீடு வாழ்க என்பாக்கு

அறிந்து' (குறள். 1312)

(3) நினைத்தல், வாழ்த்துதல் -

remembering, bless

'வழுத்தினாள், தும்மினோனாக

அழித்து அழுதாள் யார் உள்ளித்

தும்மினீர்? என்று' (குறள். 1317)

(5) நன்மை - good omen


துயில்


‘மன்ற முதுமரத்து ஆந்தை

குரலியம்பக் குன்றக நண்ணிக்

குறும்பிறந்து - சென்றவர் உள்ளிய

தன்மையர் போலும் அடுத்தடுத்து

ஒள்ளிய தும்மல் வரும்'

(ஐந்.எழு.38)

(ஒப்பு) Sneezing உடலை

ஆன்மா வெளியேற

முயற்சித்தல், கடவுளின் ஒப்புதல்,

நன்மை

துயில் Tuyil (sleep)

(1) இனிமை - delightful

'தெறு கதிர் இன் துயில் பசு வாய்

திறக்கும்' (நற். 275:5)

(2) இயக்கமின்மை - inactive

'முரசு முழங்கு நெடுநகர் அரசு

துயிலீயாது, மாதிரம் பனிக்கும்

மறம் வீங்கு பல்புகழ்' (பதி. 12:7-8)

(3) அக இன்பம் - pleasure / sexual

pleasure

'அணை மருள் இன் துயில் அம்

பணைத் தடமென் தோள்'

(கலி, 14:1)

(4) அமைதி - peaceful

'அருள் பொருள் மரபின் மால்யாழ்

கேளாக் கிடந்தான்போல்,

பெருங்கடல் துயில் கொள்ளும்

வண்டு இமிர் நறுங்கானல்'

(கலி. 123:4-5)

(5) இன்பம் -pleasure / joy

'இருள் மென் கூந்தல் ஏமுறு

துயிலே ' (அகம். 92:13)

(6) இருள் - darkness

'துயில் மடிந்தன்ன தூங்கு இருள்

இறும்பின்' (புறம். 126:7)

(7) தீமை, இறப்பு - bad omen, death

'என்னை மார்பில் புண்ணும்

வெய்ய, துஞ்சாக் கண்ணே

துயிலும் வேட்கும்' (புறம். 280:4)

(ஆ) தோளில் துயில் பெறுதல்

Tolil tuyil perutal

(8) காம இன்பம் - sexual pleasure

வேய் உறழ் மென் தோள் துயில்

பெறும்' (கலி, 104:24)

(இ) கூந்தலில் துயில் பெறுதல்

Kintalil tuyil perutal