பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூண்டில்


'தூண் தகு திரள் புயம் துளங்க

துண்ணெனா' (கம்ப.அயோ,443:

2)

(ஆ) கந்தம் Kantam (pole)

வலிமை

'கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து'

(அகம், 307:1-2)

(இ) கம்பம் Kampam

(6) நிலைபேறு, அசைவின்மை -

stable, unmoving

பெரு மரக் கம்பம் போல

பொருநர்க்கு உலையா நின் வலன்

வாழியவே' (புறம். 169:11-12)

(ஈ) காழ் Kal (firmness)

(7) திண்மை

'மணி - கண்டன்ன மாத்திரள்

திண்காழ்' (நெடு. 111)

(உ) கந்து Kantu

(10) திரட்சி - plumbness

'கந்தெனத் திரண்ட திண்தோள்'

(சூளா . 1628: 3)

(ஊ) கல் அணை (கல் தூண்)

Kal anai

(11)ஆதாரம், தாங்கிப்பிடித்தல் -

Support, bear

'கணையானது புவியெல்லாம்

எடுத்துண்ணும் கைச்சிலை கல்

அணையாக நின்று புவியினைத்

தாங்குமென்றால்' (தனிப்.562: 2-3)

(ஒப்பு ) Pillar அறிவாற்றல்,

ஆண்மைக்கொள்கை, ஆதாரம்,

இலிங்க உரு, உலக அச்சு,

உளஉறுதி, தாங்கும் தன்மை,

நிலைபேறு.

இரு தூண்கள் - இருமைத்

தன்மை .

உடைந்த தூண் - அழிவு,

இறப்பு, உடைந்த உண்மை ,

உடைந்த வலிமை

தூண்டில் Tintil (angle/ fish book)

(1) விரைவு - speed

'வாங்கு விசைத்தூண்டில்

ஊங்குஊங்கு ஆகி' (நற், 199:7)


தூமகேது



(2) ஆசைகாட்டுதல் - lure / tempt

பொய் போர்த்துப் பாண் தலை

இட்ட பல வல் புலையனைத்

தூண்டிலா விட்டுத் துடக்கி, தான்

வேண்டியார் நெஞ்சம் பிணித்தல்

தொழிலாத் திரிதரும்' -

(கலி. 85:22-24)

(3) கவர்தல் - entyce -

'நிலையோர் இட்ட நெடுநாண்

தூண்டில்' (மலை, 456)

(4) ஏமாற்று - cheat -

'வேண்டற்க வென்றிடினும்

சூதினை வென்றதூஉம் தூண்டில்

பொன் மீன் விழுங்கியற்று'

(குறள். 931)

ஆ) தூண்டில் இரை Tuntil irai

(7) பிணித்தல், ஈர்த்தல் - bind, entyce

'தூண்டில் இரையின் துடக்கு

உள்ளுறுத்து' (பெருங். உஞ்.35: 108)

(ஒப்பு) Hook ஆண், கவர்ச்சிப்

பொருள், காதல், மீன் பிடித்தல்.

தூதுளங்கனி Titulaikani (a fruit)

(1) சிவப்பு நிறம்

'தூதுளங் கனியை வென்ற

துவர்த்த வாய் வெண்மை தோன்ற'

(கம்ப .சுந்.202: 2)

தூமகேது Timaketu (comet)

(1) துன்பம், தீமை / கேடு (bad

omen)

தூமகேது புவிக்கு எனத்

தோன்றிய வாம மேகலை

மங்கையரால் வரும் காமம்

இல்லை எனின் கடுங்கேடு எனும்

நாமம் இல்லை நரகமும்

இல்லையே' (கம்ப.அயோ.114)

(ஆ) தூமம் தோன்றுதல் Tumam

tonrutal

(2) தீமை, வறட்சி - bad omen, drought

'மைம்மீன் புகையினும், தூமம்

தோன்றினும், .. .. .. .. பெயல்

பிழைப்பு அறியாப்

புன்புலத்ததுவே' (புறம், 117:1-7)

164