பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூற்றின்கண் தூவிய வித்து


தூற்றின்கண் தூவிய வித்து Turrinkan

tuviya vittu

(1) வீண் - furtile

‘முறைசெய்யான் பெற்ற

தலைமையும் நெஞ்சில்

நிறையிலான் கொண்ட தவமும் -

நிறையொழுக்கம் தேற்றாதான்

பெற்ற வனப்பும் இவைமூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து'

(திரி.80)

தெங்கு Tenku (coconut palms)

(1) வளமை

'ஒலி தெங்கின், இமிழ் மருதின்

புனல் வாயில், பூம்பொய்கை,

பாடல் சான்ற பயம்கெழு

வைப்பின்' (பதி, 13:7-9)

இடைநிலை நட்பு - friendship

'கடையாயார் நட்பில் கமுகனையர்

ஏனை இடையாயார் தெங்கின்

அனையர்' (நாலடி.216: 1-2)

தென்குமரி Tenkumari (capecomorine)

(1) பெண்மை - feminine

'தென்குமரி வட பெருங்கல் குண

குட கடலா எல்லை ' (புறம். 17:1-2)

தென் புலம் Tenpulam (south)

(1) இறப்பு - death

'தென்புல வாழ்நர்க்கு அருங் கடன்

இறுக்கும் பொன் போல் புதல்வர்ப்

பெறாஅதீரும்' (புறம். 9:3-4)

(ஆ) தென்திசை Tenticai

(2) சிறப்பு - greatness

'மா தவம் செய்த தென்திசை

வாழ்ந்திட' (பெரிய.35: 1)

(3) மேன்மை

'பந்த மானுடப் பாற்படு தென்திசை

இந்த வாந்திசை எட்டினும்

மேற்பட வந்த புண்ணியம்

யாதென' (பெரிய,40: 2-4)

(இ) இராவணன் பிள்ளைகளும்,

உறவினரும் மற்றுமுள்ள

அரக்கர்களும் தென்திசையில்

சென்று திரும்பி வராதது Iravanan


தேமாத் தீங்கனி

pillaikalum marumylla arakkarkalum

tenticaiyil cenru tirumpi varatatu

(Ravana and kindred going south)

(4) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'மக்களும் சுற்றமும்

மற்றுளோர்களும் புக்கனர் அப்

புலம் போந்தது இல்லையால்

சிக்கு அற நோக்கினேன் தீய

இன்னமும் மிக்கன கேட்க என

வியம்பல் மேயினாள்' (கம்ப.சுந்.

369)

(உ)தென்புலத்தார் Tenpulattar

(5) இறந்தோர் - the death

'தென்புலத்தார் தெய்வம்

விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

(குறள்.43)

(ஒப்பு) South உடலின்

மேல்பாதி, சூரியன், நெருப்பு,

பாலைவனம், புது மலர்ச்சிப்

பருவம், போனிக்ஸ்

மழை, வெப்பம், தீமை, நரகத்தின்

இயல்புடைய பகுதி.

தென்றல் Tenral (southerly)

(1) இனிமை - delightful

'கோடு அறை கொம்பின் வீ உகத்

தீண்டி மராஅம் அலைத்த மண

வாய்த் தென்றல் சுரம் செல் மள்ளர்

சூரியல் தூற்றும் என்றுழ் நின்ற

புன் தலை வைப்பில்'

(அகம். 21:11-14)

(2) குளிர்ச்சி - cool

'எல்லுறு மாலை இமயத்து

உயர்வரை அல்குதற்கு எழுந்த

வந்தண் தென்றால்'

(பெருங் மகத.1: 198-199)

(ஒப்பு) Breeze உணர்வு,

காதலுக்குரிய ஆர்வநாட்டம்,

கடவுளின் தூதுவன், சுவாசம்,

வளமை.

தேமாத் தீங்கனி Témat tihkani

(mango fruit)

(1) இனிமை - sweetness


165