பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேர்


'தேமாத் தீங்கனி போலத்

தித்திக்குமே' (திருநா தேவா.201: 4)

தேர் Tér (chariot)

(1) விரைவு | வேகம் - speed /

quickness

'கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே'

(நற், 45:5)

(2) திண்மை - firmness

'திண்தேர்ப் பொறையன் தொண்டி

முன் துறை' (குறு. 128:2)

(3) மாட்சி - dignity / honour

'திண்ணிதின் மாண்டன்று தேரே'

(ஐங்.449: 3)

இருக்கை | இடம் | நிலம் -

seat / place / world

'வேத மா பூண் வையத் தேர்

ஊர்ந்து ' (பரி. 5:23)

(5) அழகு

'அணிகிளர் | நெடுந்திண்தேர்

அயர்மதி' (கலி, 30:19)

(6) வருத்தம் - distress

'அளிய என் உள்ளத்து உயவுத் தேர்

ஊர்ந்து விளியா நோய் செய்து,

இறந்த அன்பிலவனை'

(கலி. 144:37-39)

(8) கானல் - mirage

'இடு மருப்பு யானை இலங்கு

தேர்க்கு ஓடும் நெடுமலை

வெஞ்சுரம் போகி' (கலி, 24: 10-

11)

(ஆ) தேர்மணிக் குரல் Termanik

kural

(8) முன்னறிவிப்பு – herald / announce

'வள் வாய் ஆழி உள் வாய்

தோயினும் புள்ளு நிமிர்ந்தன்ன

பொலம் படைக் கலி மா வலவன்

கோல் உற அறியா உரவு நீர்ச்

சேர்ப்பன், தேர்மணிக் குரலே!'

(நற். 78:8-11)


(இ) இரவி தேர் Iravi ter (sun's

chariot)

விரைவு - speed

'ஈண்டு இவை நிகழ்உழி இரவி

தேர் எனத் தூண்டுறு தேரின்மேல்

தோன்றும் தோன்றலை'

(கம்ப.சுந்.1005:1-2)


தேரை


(ஈ) {{u|தனிக்கால் தேர்}} Tanikkal ter -

one wheeled chariot (sun)

(12)தனிமை, ஒப்பின்மை

'கனல்கதிர் கான்று கடுமை கூராத்

தனிக்கால் தேரோன் தனிமை எய்த'

(பெருங் உஞ்.53: 160-161)

(உ) வையம் Vaiyam

விரைவு

'கடிது இயல் வையம் கவ்வையின்

ஏற்றி' (பெருங்.உஞ்.35: 151)

(ஒப்பு) Chariot அரச ஆற்றல்,

ஆனையுரிமை, கீழ்ப்படுத்தல்,

செல்வ வளமை, தகுதி, போர்.

தேரின் கொடுஞ்சியில் ஏறிக்

காக்கைகள் ஒலித்தல் Terin

kotuiciyil erik kakkaikal olittal

(1) தீமை, தோல்வி

கதிர்மணித் தேர் கொடுஞ்சேறிக்

காக்கைகள் எதிரெதிர் சிலம்பின'

(சூளா .1220: 1-2)

தேரை Térai (toad / frog)

(1) நீர்வளம் - water aboundance

'இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த்

தேரை' (குறு. 193:2)

(2) ஒலி - sound

‘நெடு நீர் அவல பகுவாய்த் தேரை'

(ஐங். 453:1)

(3) சிறுமை - mean, smallness

'உறுபுலி ஊனிரை இன்றி ஒருநாள்

சிறுதேரை பற்றியும் தின்னும்'

(நாலடி.193: 1-2)

(ஆ) தேரை தெவிட்டல் Térai

tevittal (croak)

(3) கார்காலம் - rainy season

'வரிநுணல் கறங்க, தேரை

தெவிட்ட கார் தொடங்கின்றே

காலை ' (ஐங், 468:8-1-2)

(இ) நுணல் Nunal

(4) பேதைமை - foolish

'பொல்லாத சொல்லி

மறைத்தொழுகும் பேதைதன்

சொல்லாலே தன்னைத்


166