பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேள்

துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள்

முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்!'

(பழமொழி. 114)

(ஈ) கிணற்றுத்தவளை Kinarruttavalai

(5) அறியாமை - ignorance

'உணற்(கு) இனிய இன்னீர் பிறி(து)

உழிஇல் என்றும் கிணற்(று)

அகத்துத் தேரைபோல் ஆகார் -

கணக்கினை முற்றப் பகலும்

முனியா(து) இனிதோதிக் கற்றலிற்

கேட்டலே நன்று' (பழமொழி, 5)

தேள் Tel - scorpion

(1) காம வேட்கை - lust

'இடு தேள் மருந்தோ , நின்

வேட்கை ?' (கலி, 110:2-3)

(2) இடுதேனிடுதல் - false accuse

'பட்ட பதியிற் படாத

தொருவார்த்தை இட்டன ரூரா

ரிடுதேளிட் டென்றன்மேல்' (சிலப்.

9: 47-48)

(ஆ) தேள் எறிதல் Tel erital

(3) துன்பம் - affliction

'விடத் தேள் எறிந்தாலே போல

வேதனை ஆற்றவும் பட்டோம்'

(நாலா.529: 3-4)

(ஒப்பு) Scorpion ஆபத்து,

இகழ்ச்சி, கடும் பாறைகள்,

கழிகாமம், கழிவிரக்கம், கண்டனம்,

தற்கொலை, தீமை, துயருறுதல்,

தொல்லை, நெருப்பு, பாலைவனம்,

பாழ்நிலை, வறட்சி, நச்சுத்தன்மை.

தேன் Tén (honey)

(1) இனிமை - sweetness

'சாந்தில் தொடுத்த தீம் தேன்

போல' (நற். 1:4)

(2) நட்பு / அன்பு - friendship / love

'பெருந்தேன் இழைக்கும்

நாடனொடு நட்பே ' (குறு. 3:4)

(3) வேட்கை - strong desire

'பருவத் தேன் நசைஇப் பல்பறைத்

தொழுதி' (குறு. 175:1)

(4) விருப்பம் - desire

'யாமக்குறை ஊடல் இன் நசைத்


தேன்


தேன் நுகர்வோர்' (பரி. 10:32)

(5) காமம் - passion

'திருவில் திகழ் காமத் தேன் பருகித்

தேவர்' (சீவக.3141:3)

(6) இன்பம் - pleasure

'மையேர் குவளைக்கண் வண்டினம்

வாழும் செந்தாமரை வாய் எய்யேம்

எனினும் குடைந்தின்பத்

தேனுண்டு எழில் தருமே'

(திருக்கோ .7: 66.3-4)

(ஆ) பிரசம் Piracam

(5) இனிமை, சுவை - sweet, tasty

'பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்

பால்' (நற். 110:1)

(6) நறுமணம் - fragrance

'நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு'

(நற். 268:5)

(7) களிப்பு - joy/exultation

'இருங் களிப் பிரசம் ஊத'

(நற். 311:10)

(இ) நறவு Naravu

(8) மகிழ்ச்சி - happiness

'நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப்

பெரியன்' (நற். 131:7)

(9) மயக்கம் - intoxication

'தேறுகள் நறவு உண்டார் மயக்கம்

போல்' (கலி, 147:2)

(10) வளமை - exuberance

'நறவு நொடை நெல்லின் நாள்

மகிழ் அயரும்' (அகம். 61:10)

களிப்பு

நறவு உண் மண்டை நுடக்கலின்,

இறவுக்களித்து பூட்டு அறு

வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்'

(நற். 131:7)

இனிமை, களிப்பு

'இன்களி நறவின் இயல்தேர்

நன்னன்' (அகம். 178:16)

விருப்பம்

'நல் அமிழ்து ஆக, நீ நயந்து

உண்ணும் நறவே' (புறம். 125:8)

(ஈ) நறா Nara

மகிழ்ச்சி - joy

'ஒப்புரவினான் அறிப

சான்றாண்மை - மெய்க்கண்

மகிழான் அறிப நறா' (நான்.80:3-4)


167