பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேன்மாரி பாற்கடல் பெய்தல்

(ஈ) தாது Tatu (pollen) -

(11) தண்மை -

'தண் தாது ஊதிய வண்டினம்

களிசிறந்து' (அகம், 170:6)

(12) செல்வம் - wealth -

‘வறியோர்க்கு உதவுதல் செல்லாது

ஒய்யெனச் - சிறியோர் உற்ற

செல்வம் போலப் பொருசிறை

வண்டினம் பொருந்தாது. மறக்க'

(பெருங். இலா . 14:32-34).

(உ) மடல்பனைக்குள் வைத்த

தேன் Matalpanaikkul vaitta ten

(13) பயனின்மை

'சுற்றும் கழிங்குளவி சூரைத்தூறு

ஆரியப்பேய் எற்றும் சுடுகாடு

இடிகரையின் புற்றில் வளர்ந்த

மடல்பனைக்குள் வைத்த தேன்

ஒக்கும் தளர்ந்தோர்க்கு ஒன்று

ஈயார் தனம்' (தனிப்.44) -

(ஒப்பு) Honey அறிவு நுட்பம்,

இனிமை, எளிமை நயம்,

கற்புடைமை, கன்னிமை, காதல்,

கவர்ச்சி, செயல்நிறம், செல்வ

வளம், தன்னடக்கம், தியாகம்,

தூய்மை , தேர்ச்சித்திறம்,

தொடக்கம், நடுநிலைமை, நாநலம்,

மரியாதை, மிகுதி, முழுமை,

விவேகம், சிற்றின்ப வேட்கை,

போலித்தோற்றம், போலிப் புகழ்ச்சி.

தேன்மாரி பாற்கடல் பெய்தல் Tenmari

parkatal peytal

(1) செல்வம்

'திருவிளை தேன்பெய் மாரி

பாற்கடல் பெய்த தென்றாள்'

(சீவக.2077)

(2) இன்பம், நன்மை (மிகுதல்)

'ஆன்பால் தெண்கடல் அமுதுற

வளைஇய தேன்பெய் மாரியின்

திறவதாக' (பெருங். உஞ்.34; 101-

102)

தேனீ TénI (boney bee)

(1) பொருளிழப்பு - loss

'உடாஅதும் உண்ணாதும்

தம்உடம்பு செற்றும் கெடாஅத

நல்லறமும் செய்யார் கொடாஅது


தொடர்ந்து பல பிணங்களும் தூங்குதல்


வைத்து ஈட்டினார்இழப்பர்

வான்தோய் மலைநாட உய்த்து

ஈட்டும் தேனீக் கரி' (நாலடி.10)

தேனை மாரி Tenai mari (honey rain)

(1) இனிமை

தேனை மாரியன்னான் திசை

காவலன்' (சீவக.161:3)

(ஆ) தேன்தரு மாரி Tentaru mari

இனிமை

தேன்தரு மாரி போன்று தீவிய

கிளவி தம்மால்' (சீவக.581:1)

தைத்திங்கள் Taittihkal (a month)

(1) தண்மை - cool

'தைஇத் திங்கள் தண் கயம் படியும்'

(நற், 80:7)

(ஆ) தைந்நீராடல் Tainniratal

(a festival)

(2) பலன் எதிர்பார்ப்பு, பயன்

கருதுதல் - expectation

இழை அணி. ஆயமொடு தகு நாண்

தடைஇ, தைஇத் திங்கள் தண் கயம்

படியும் பெருந் தோட் குறுமகள்'

(நற், 80:6-8)

தொடர் (சங்கிலி) Totar (chain)

(1) உறவு - relationship

'பின்னிய தொடர்நீவி, பிறர்

நாட்டுப் படர்ந்து, நீ மன்னிய

புணர்ச்சியான் மறுத்தரல்

ஒல்வதோ ' (கலி, 15:18-19)

(2) வலிமை - strong

'மென்பிணி வன்தொடர் பேணாது,

காழ் சாய்த்து ' (மது. 382)

தொடர்ந்து பல பிணங்களும்

தூங்குதல் Totarntu pala

pinankalum tuhkutal (hanging

corpses)

(1) அச்சம் - fear -

'தூக்களீர்ப்பன தொடர்ந்த பல்

பிணங்களும் தூங்க .. ... ... யாக்கை

கொண்டவர்க்கு அணைதலுக்கு

அரிதது பெரிதும்' (நீலகேசி.31:

2,4)


168