பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடை

(ஊ) திருவடி Tiruvati

(7) மேலாண்மை, வல்லன்மை -

authority, power

'திருவடி முடியின் சூடி செங்கதிர்

உச்சி சேர்ந்த அருவரை யென்ன

நின்ற அரக்கர் தம் அரசை..'

(கம்ப .யுத்த .450: 1-2)

(எ) செருப்பிடைப்பட்ட பரல்

Ceruppitaippatta paral

(8) இடையூறு - hindrance

'செருப்பு இடைச் சிறு பரல்

அன்னன்' (புறம். 257:1)

(ஒப்பு) Sandal, Slipper, Shoe

அடையாளப்படுத்துதல், அரசமைவு,

அன்பு, இணைவு, இசைவு,

உடைமை, உரிமை, ஏற்பு,

கருப்பைவாய், பயணம், பணிவு,

மகிழ்ச்சி, வலிமை, வளமை,

விடுதலை, தாழ்நிலை, துயருறுதல்,

வறுமை, வெட்கக்கேடு.

தொடை (அம்பு) Totai (arrow)

(1) வீரம், செம்மை - valour,

uprightness

'துவர்செய் ஆடைச் செந் தொடை

மறவர்' (நற். 33:6)

(2) வலிமை - strength

'வீங்கு விளிம்பு உரீஇய

விசைஅமை நோன்சிலை வாங்கு

தொடை பிழையா வன்கண்

ஆடவர்' (அகம். 175:1-2)

(ஆ) அம்பு Ampu

(3) செயல்திறம் - capability

‘வடி நவில் அம்பின் வினையர்

அஞ்சாது' (நற். 48:7)

(4) வலிமை - powerful

'வல் வில் அம்பின் எய்யா வண்

மகிழ்' (நற். 198:10)

(5) செம்மை , தீமை அழிதல் -

upright, destroying, evil

'செங்களம் படக்கொன்று அவுணர்த்

தேய்த்த செங்கோல் அம்பு'

(குறு. 1:1-2)

(6) வெற்றி - victory, success

அம்புடை வலத்தர் உயர்ந்தோர்

பரவ' (பதி. 80:11)


தொடை


(7) கூர்மை - sharp

'வள் வாய் அம்பின், கோடைப்

பொருநன்' (அகம், 13:10)

(8) ஆற்றல் - ability, power

'வினை வல் அம்பின் விழுத்

தொடை மறவர்' (அகம். 105:13)

(9) கொலை - killing

'செந் தொடை பிழையா வன்கண்

ஆடவர் அம்பு விட, வீழ்ந்தோர்

வம்பப் பதுக்கை ' (புறம். 3:20-21)

(10) விரைவு - quick

'எம் அம்பு கடி விடுதும், நும்

அரண் சேர்மின் என' (புறம், 9:5)

(11) காவல் - security, safety

'அம்பு துஞ்சும் கடி அரணால்'

(புறம். 20:11)

(12) புகழ் | சிறப்பு - fame / glory

'புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத்

திளைக்கும் கொலைவன் யார்

கொலோ ?' (புறம். 152:7-8)

(13) பகை, ஆற்றல் - enmity, ability

'வீங்குதோட் செம்பியன் சீற்றம்

விறல் விசும்பில் தூங்கும் எயிலும்

தொலைத்தலால் - ஆங்க முடியும்

திறத்தால் முயல்கதாம் கூரம்

படியிழுப்பின் இல்லை யரண்'

(பழமொழி. 155)

(14) அழிவு

கொண்டொழுகு மூன்றற் சூதவாய்

பசித்தோற்றம் பண்டொழுகி வந்த

வளமைத்தங் - குண்டது

கும்பியிலுந் திச்சென் றெறிதலால்

தன்னாசை அம்பாயுள் புக்கு

விடும்!' (பழமொழி. 392)

(18) விரைவு, தீமை - quickness, evil

... .. .. விசையின் நரிமா

உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்?'

(நாலடி.152: 2-4)

(இ) காமன் அம்பு Kaman Ampu

(cupid's arrow)

(16) அன்பு , காதல் – liking, love

'தன் நெஞ்சு ஒருவற்கு

இணைவித்தல் யாவர்க்கும்

அன்னவோ - காம! நின் அம்பு?'

(கலி. 147:47)

(ச) மலர் அம்பு Malar ampu

(flower arrow)

171