பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடை

'கணைகொடிது யாழ்கோடு

செவ்விது ஆங் கன்ன வினைபடு

பாலால் கொளல்' (குறள். 279)

(32) கடுமை - fierce

'யானைமேல் யானை நெரிதர

ஆனாது, கண்நேர் கடுங்கணை

மெய்ம்மாய்ப்ப' (களவழி.8: 1-2)

(33) துன்பம் - pain

'பல்கணை எவ்வாயும் பாய்தலால்

செல்கலாது ஒல்கி உயங்கும்

களிறெல்லாம்' (களவழி.10: 1-2)

(ஓ) காமன்கணை Kaman kanai

(cupid's arrow)

(34) இன்பம் | காமம் - pleasure,

passion

.. .. கவர் கணைச் சாமனார்

தம்முன் செலவு காண்'

(கலி. 94:33-34)

(ஓ) நாராயம் Narayam

(35) உயர்வு - lofty

'காழார மார்ப! கசடறக் கைகாவாக்

கீழாயோர் செய்த பிழைப்பினை

மேலாயோர் உள்ளத்துக்

கொண்டு நேர்ந்(து) ஊக்கல்

குறுநரிக்கு நல்லநா ராயங் கொளல்'

(பழமொழி. 50)

(ஔ) எய் கணை நிழல் Ey kanai

nilal (became

extinct, transitory, impermanent)

(36) விரைந்தழித்தல், நிலையாமை

‘வைகல்தோறும் இன்பமும்

இளமையும் எய் கணை நிழலின்

கழியும்' (நற், 46:1-2)

(க) சரம் பெய் தூணி Caram pey

tuni (quiver)

(37) சொல் - word, speech

'தூதுவர் உருவக் காளை செவிசுடு

சரம்பெய் தூணி' (சூளா.1203:3)

(ங) மலர் வாளி Malar vali

(38) காதல்

'கண்டு மகிழ்வெய்திக் காதலிற்

சிறந்து விரைமலர். வாளியொடு

வேனில் வீற்றிருக்கும்' (சிலப்.2: 25-

26)


தோரணம்


(ஒப்பு) Arrow இணைப்பு,

எண்ணங்களின் ஆற்றல்,

ஊடுருவுதல், காதல், சூரியக்கதிர்,

திறத்தல், போர், வளமை,

வேட்டையாடுதல், வேகம், இறப்பு,

பழிவாங்கும் எண்ணம்.

தொண்டை (ஆதொண்டைக் கனி)

Tontai (a fruit)

(1) சிவப்பு நிறம் - red

'வாயிதழ்த் திறங்கொளக் கனிந்த

தொண்டை வந்தொசிந்து'

(சூளா .793: 1)

தொழுநை (யமுனையாறு) Tolunai (a

river)

(1) வளம் - fertile

'வண் புனல் தொழுநை வார் மணல்

அகன் துறை, அண்டர் மகளிர் தண்

தழை உடீஇயர்' (அகம். 59:4-5)

தோட்டி (அங்குசம்) Totti (goad)

(1) அடங்குதல் - control

'எயில் முகம் சிதையத் தோட்டி

ஏவலின்' (பதி. 38:5)

(2) வலிமை - strong

'கடுங் கண்ண கொல் களிற்றால்

காப்பு உடைய எழு முருக்கி,

பொன் இயல் புனை தோட்டியால்

முன்பு துரந்து, சமம் தாங்கவும்'

(புறம். 14:1-4)

(3) திண்மை - firm

'உரன் என்னும் தோட்டியால்

ஓரைந்தும் காப்பான் வரன் எனும்

வைப்பிற்குஓர் வித்து' (குறள். 24)

(3) நெறிப்படுத்துதல் - guide

'காட்டுழல் களிநல் யானை கால்

கையினோர்ப் பித்தேறித்

தோட்டியிட்டு ஊர்வதே போல்

சூரிய சோமன் தானும்'

(நீலகேசி.265: 1-2)

தோரணம் Toranam (festoon)

(1) மங்கலம் - auspicious

'தோரண வீதியும் தோமறு

கோட்டியும் பூரண கும்பமும்

பொலம் பாலிகைகளும் பாவை

விளக்கும் பலவுடன் பரப்புமின்'

(மணி.1: 43-45)


173