பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நமச்சிவாய

(ஒப்பு ) Snail அமைதி நிலை,

உணர்ச்சி, பிறப்பு, மென்மை,

விடாமுயற்சி; சோம்பல்,

நிலையாமை

நமச்சிவாய Namaccivaya

(1) நல்ல துணை - aid, support

'கற்றுணைப் பூட்டியோர் கடலில்

பாய்ச்சினும் நற்றுணையாவது

நமச்சிவாயவே' (திருநா. தேவா.41:

3-4)

(2) செம்மை - upright

'கோவினுக்கு அருங்கலம் கோட்டம்

இல்லது நாவினுக்கு அருங்கலம்

நமச்சிவாயவே' (திருநா, தேவா.42:

3-4)

(3) பாவம் தீர்ப்பது - remove sin

'பண்ணிய உலகினில் பயின்ற

பாவத்தை நண்ணி நின்று

அறுப்பது நமச்சிவாயவே'

(திருநா.தேவா.43: 3-4)

(4) நடுக்கம் இன்மை - fearlessness

'அடுக்கற் கீழ்க் கிடக்கினும்

அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக்

கெடுப்பது நமச்சிவாயவே'

(திருநா. தேவா.44: 3-4)

(5) நலம் கொடுப்பது - well being

'குலமிக ராகிலும் குலத்திற்கு

ஏற்பதோர் நலமிகக் கொடுப்பது

நமச்சிவாயவே' (திருநா. தேவா.46:

3-4)

(6) அறியாமை அகற்றுதல் - remove

ignorance

'இல்லக விளக்கது இருள்

கெடுப்பது .. .. .. நல்லக விளக்கது

நமச்சிவாயவே' (திருநா.தேவா.48)

(7) இடுக்கண் இன்மை - devoid of

migery

'நாப்பினை தழுவிய நமச்சிவாயப்

பத்து ஏத்தவல்லார் தமக்கு

இடுக்கண் இல்லையே'

(திருநா. தேவா.50: 3-4)

நரந்தம் Narantam (a grass)

(1) நறுமணம் - fragrance

'நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்'

(குறு.52: 3)

(2) உயர்வு - lofty


நரி


'கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்து இலங்கு அருவியொடு

நரந்தம் கனவும்' (பதி.11: 21-22)

நரி Nari (fox)

(1) தீமை - evil

செங்கோல் வாளிக் கொடு வில்

ஆடவர் வம்ப மாக்கள்

உயிர்த்திறம் பெயர்த்தென, வெங்

கடற்று அடை முதல் படு முடை

தழி இ. உறு பசி குறு நரி குறுகல்

செல்லாது மாறு புறக் கொடுக்கும்

அத்தம்' (நற்.164: 6-10)

(2) இழிவு | தகுதியின்மை - low,

incompetent

'ஒடுங்கா வயத்தின், கொடுங்கேழ்,

கடுங்கண், இரும்புலி கொண்மார்

நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு

நரி பட்டற்றால்' (கலி.65: 23-25)

(3) கொடுமை - cruel

'தெறி மறி பார்க்கும் குறு நரி

வெரீஇ' (அகம். 274: 10)

(4) கள்ளம் - cunning, deceitful, tricky

'நரியார் தம் கள்ளத்தால் பக்கான

பரிசொழிந்து நாளும் உள்கி'

(சுந். தேவா .342: 1-2)

(5) வஞ்சம்

'அரிமா வளைந்த நாரிமாப் போல

இகன்முனை வேட்டுவர் இடுக்கண்

செய்ய' (பெருங். உஞ்.56: 25-26)

(ஆ) நரி நன்பகலில்

ஊளையிடுதல் Nari nanpakalil

ulaiyitutal

(6) தீமை, பாழ் / வீண் - evil omen,

futile / ruin

'ஞாயிறு கோடா நன்பகல்

அமயத்து, கவலை வெண் நரி

கூஉம்முறை பயிற்றி ... ... ... ..

பெரும் பாழ் ஆகும்மன் அளிய,

தாமே!' (பதி.22: 34-38)

(இ) நரிகள் தங்குதல் Narikal

taikutal

(7) தீமை , அழிவு - evil, destruction

'.. .. .. .. நிருதர் வைகும் பேயினும்

பெரிய பேம் நரிகளும் புரிதரும்

எண்ணின்' (கம்ப.யுத்.107:

2-4)


177