பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா

'விழைதக ஓங்கிய கழைதுஞ்சு

மருங்கின் கான் அமர் நன்னன்

போல, யான்ஆ குவல், நின்

நலம்தரு வேனே ' (அகம்.392: 26-28)

நா Na (tongue)

(1) சொல்திறம் - speech skill

'அமிழ்து பொதி செந்நா அஞ்ச

வந்த' (குறு.14: 1)

(2) சொன்னலம் - desirable words

'முது மொழி நீரா, புலன்நா

உழவர் புது மொழி கூட்டுண்ணும்'

(கலி.68: 4-5)

(3) சொல்வளம் - word power

'அரு மறை நாவின் அந்தணர்க்கு

ஆயினும்' (சிறுபா.204)

(4) சொல் - word / speech

'யாகாவார் ஆயினும் நா காக்க

காவாக்கால் சோகாப்பர் சொல்

இழுக்குப் பட்டு' (குறள். 127)

(5) உயிர்ப்பு / பேச்சு - alive, speech

'நாச்செற்று விக்குள்

மேல்வாராமுன் நல் வினை

மேற்சென்று செய்யப்படும்.'

(குறள். 335)

(6) சொல்வன்மை - mighty speech

'நா நலம் என்னும் நலன் உடைமை

அந் நலம் யா நலத்து உள்ளதூஉம்

அன்று ' (குறள். 641)

(ஒப்பு) Tongue இணங்குவித்தல்,

சுவை, சொல்லாற்றல், கொடூரம்,

தகுதிக் கேடான பேச்சு,

நிலையாமை, பழிச்சொல், பொய்.

நாகத்தின் ஆவி Nakattin avi (snakes'

hiss)

(1) துன்பம் - affliction, pain

'நாகப் பிள்ளை அங்கண் பிறந்த

ஆவி போல வைது வெய்துயிரா'

(பெருங்.உஞ்.46: 165-166)

நாகம் Nakam (நாகமரம்) (a tree)

(1) குறிஞ்சித்திணை - mountain tract

'நனைசினையன நகுவிரையன

நலனுடையன நாகம்' (நீலகேசி.16:

1)

நாமநீர் Namanir


நாவாய் கவிழ்த்த நாய்கன்


(1) நன்மை , புனிதம் - good, holy

'நலம்புரி பவித்திரம் ஆகு நாமநீர்'

(சூளா .417: 2)

நாய்களோடு சேர்ந்து நின்று

நரிக்கூட்டங்கள் ஊளையிடுதல்

Naykalbtu_cerntu ninru narikkuttankal

ulaiyitutal

(22) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'ஞாளியோடு உளைக்கின்ற நரிக்

குலம்பலவால்' (கம்ப.ஆரண்.430: 4)

நாவல் கனி Naval kani (a fruit)

(1) தலைவி

பொங்கு திரை பொருத வார்

மணல் அடைகரைப் புன் கால்

நாவல் பொதிப் புற இருங்கனி'

(நற்.35: 1-2)

(2) வீண் - futile

'கற்றானும் கற்றர்வாய்க்

கேட்டானும் இல்லாதார் தெற்ற

உணரார் பொருள்களை - எற்றேல்

அறிவில்லான் மெய்தலைப் பாகு

பிறிதில்லை நாவல்கீழ்ப் பெற்ற

கனி' (பழமொழி.11)

(ஆ) நாவற்பழம் Navarpalam

(3) கருமை - black

பெருங்குலைப்பெண்ணைக்

கருங்கனி அனையதோர் இருங்கனி

நாவற் பழமொன் றேந்தி'

(மணி.17: 29-30)

(இ) வெண்ணாவல் Vennaval

(4) வெற்றி

வெண்ணாவல் அமர்ந்துறை

வேதியனை'

(திருஞான.தேவா.1156:1)

நாவாய் கவிழ்த்த நாய்கன் Navay

kaviltta naykan

(1) கவலை, கலக்கம், துன்பம் -

worry, anxiety, distress

'நாவாய் கவிழ்த்த நாய்கன் போல

ஓவா அவலமொடு காவலன்

கலங்கிப் பண்ணமை நல்லியாழ்


179