பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10) பருவகாலங்கள் அவ்வக்காலப் பயிர் - தாவரத்தன்மையால் குறிக்கப்படுவது உலகளாவிய தொல்படிவ (arche type) நிலையுமாகும். பனிக்காலம் அவரை பூத்தலாலும்இளவேனில் அதிரல் பூத்தலாலும் உணர்த்தப்படுகின்றன.இதனால் இம்மலர்களை அவ்வக் காலக் குறியீடுகளாகக் கொள்ளலாம்.

கொழுங்கொடி அவரை பூக்கும்

அரும்பனி அற்சிரம் வாரா தோரே (குறு...82.5-6)

{{gap2}}முதிரா வேனில் எதிரிய அதிரல்... (நற்.337.3)

'காரும் மாலையும் முல்லை'(தொல்.9521) எனத் தொல்காப்பியம் கூறுவதில் பருவகாலமும் நாட்பொழுதும் தாவரக் குறிப்புடன் அமைவது இங்கு குறிப்பிடத்தக்கது. விடியற்காலக் குறியீடாக சேவலும், அன்னமும், மாலைப்பொழுதின் குறியீடாக ஆம்பல் குழலும் கொன்றைக் குழலும் அமைவது, பிறக் கருப்பொருட்களும் காலக் குறியீட்டுப் பாங்கு கொள்வதை வழங்கும்.

குடுமி நெற்றி நெடுமரச் சேவல்

தலைக்குரல் விடியல் போகி...

(அகம்.87.5-6)

அன்னம் கரைய....

இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறை

(மது.675..686)


(ii) உணர்வுகளும்,மன அனுபவங்களுமாகப் புலப்படும் உரிப்பொருள் அவ்வந் நிலம்,பொழுது,கருப்பொருட்களைக் குறியீடாகக் கொள்கின்றன. சான்றாக,நெய்தல் நிலத் தாவரங்களான அடும்பு,அரலை,என்பனவும் இரங்கல்/வருத்தம் எனத் துன்பக் குறிப்புத் தருவது காணப்படுகிறது. சான்று:-

படிவ மகளிர் கொடிகொய்து அழித்த

பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறை

(நற்.272.2-3)


அரலை மாலை சூட்டி

ஏமுற்றன்று இவ் அழுங்கல் ஊரே

(குறு.214.6-7)


நீராடுதல்,அருவியாடுதல்,குறிஞ்சி உரியை உணர்த்துகின்றன. பெயர்நிலையுடன் வினைநிலையும் குறியீடு காண அடிப்படையாதலும் இங்கு கருதலாம்.

ஆர்க வெற்பன் மார்பு புணையாக

கோடுஉயர் நெடுவரைக் கவாஅன் பகலே

பாடுஇன் அருவி ஆடுதல் இனிதே

(குறு.353.1.3)

கடும்புனல் மந்த காவிரிப் பேரியாற்று

நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல

நடுங்கு அஞர் தீர முயங்கி....

(அகம்.62.9-11)


சிலப்பதிகாரத்தின் குன்றக் குரவை,அருவியாடியும் சுனை குடைந்தும் அலவுற்று வரும் குறமகளிரைக் காட்டுவதும் (சிலம்பு.2412)இங்கு இணைத்துக் கருதற்குரியது.