பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலம்

'அழுக்காறு எனஒரு பாவி

திருச்செற்றுத் தீயுழி உய்த்து

விடும்.' (குறள். 168)

(ஒப்பு) Hell இருள், இழிவு,

கேடு, துயரம், துன்பம், வதை,

வாழ்வின் இழப்பு.

நிலம் Nilam (earth, land, world)

(1) பெரிய அளவு - huge, large

மா நிலம் சேவடி ஆக'

(நற். கட, வா: 1)

(2) விரிவு - wide, broad

நிலம் கண்டன்ன அகன் கண்

பாசறை' (நற். 125: 10)

(3) நிலைபேறு - stable

'நிலம் புடைபெயர்வதாயினும்'

(நற்.289: 2) |

(4) அளவின்மை - limitless

unfathomable

'நிலம், நீர், வளி, விசும்பு என்ற

நான்கின் அளப்பு அரியையே'

(பதி.14: 1-2)

(5) பெண் - femenine

நிலமகள் அழுத காஞ்சியும்'

(புறம்.365: 10)

(6) பொறுமை - patience

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்

போல தம்மை இகழ்வார்ப்

பொறுத்தல் தலை' (குறள். 151)

(7) இடம்பெயராமை - unmoved

'பேராப் பெருநிலன் சேய்த்தே

யுடம்பொன்றா' (இன்னிலை.43:1)

(8) அழிவின்மை - undestroyed

'நிலனும் நீரும் மாய் நெருப்பும்

காற்றும் என்று உலைவு இல் பூதம்

நான்கு உடைய ஆற்றலான்'

(கம்ப.கிட்.116: 1-2)

(9) உயிர் - life / soul

'வெவ்வினை செய்யு மாந்தர்

உயிரெனும் நிலத்து வித்தி'

(சீவக.2762: 1)

(ஆ) நிலம் புடை பெயர்தல்

Nilam putai peyartal (world dislodged)

(10) அரிய தன்மை , இயல்பின்மை -

rare / unnatural

'நிலம்புடை பெயரினும், .. .. .. ..

(குறு.373: 1)


நிழல்


(இ) நிலம் துடித்தல் Nilam tutittal

(tremor)

(11) தீமை , அழிவு - evil, destruction

'நிலம் துடித்தன நெடுவரை

துடித்தன' (கம்ப.சுந்.298: 1)

(ஈ) நிலத்தின் மிசை இருத்தல்

Nilattin micai iruttal (sitting on land)

(12) நன்மை - good omen (dream)

'நிலத்துமிசை இருந்தனை ஆதலின்

மற்றுநின் தலைப்பெரு நகரமொடு

நன்னாடு தழீஇக் கொற்றம்

கோடலு முற்றியதாகி முன்னிய

நின்றவை முடியத்

தோன்றுமென்று எண்ணிய

இப்பொருள் திண்ணிதின் எய்தும்'

(பெருங். இலா.13: 60-64)

(ஒப்பு) Land ஆழ்ந்த

உணர்வுகளைப் புரிந்து

கொள்ளுதல், இயற்பொருள்

வாதம், குளிர்காலம், செயல்துறைப்

பயன் நாட்டமுடைமை, தாய்மை,

நிலைபெறு, நடு இரவு, நிறை

முதிர்ச்சி, பிறப்பு, பெண்பால்,

புனிதம், மறுபிறப்பு, மெய்யுணர்வு,

விழிப்புநிலை; அழிதல், இறப்பு,

நிழல் Nilal (shadow / shade)

(1) இனிமை - sweet, good

'புன்னை பூத்த இன் நிழல் உயர்

கரை ' (நற். 91: 2)

(2) மாண்பு - noble

'ஞாயிறு காணா மாண் நிழற்

படீஇய' (குறு.378: 1)

(3) இருள், தண்மை - darkness, cool

'இருள்திணிந் தன்ன ஈர்ந்தண்

கொழுநிழல்' (குறு.123: 1) -

(4) பாதுகாப்பு - protection

'இரு நிழல் படாமை மூ - ஏழ்

உலகமும் ஒரு நிழல் ஆக்கிய

ஏமத்தைமாதோ' (பரி.3: 75-76)

(5) செல்வம் - wealth

'சிறியவன் செல்வம் போல்,

சேர்ந்தார்க்கு நிழல் இன்றி'

(கலி.10: 2)

(6) அருள் - mercy

'... ... ... ... நும் தள் நிழல் கைவிட்டு

யான் தவிர்தலைச் சூழ்வலோ?'

(கலி.20: 18)


181