பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிறைகுடம்

(7) உடனிருப்பு - abide

'நின்னின் விடாஅ நிழல் போல்

திரிதருவாய்!' (கலி.61:7)

(8) உடனுறைவு/அழியாமை - reside

with / non extinct

'தீயவை செய்தார் கெடுதல் நிழல்

தன்னை வீயாது அடி உறைந்தற்று'

(குறள்.208)

(9) நீங்காத தன்மை , உடனுறைவு -

not leave / stay

'நீளத் திரிந்துழன்றாய் நீங்கா

நிழல் போல' (தனிப்.665: 1)

(ஆ) நீருள் மதி நிழல் Nirul

mati nilal (shadow of moon in water)

(10) கொளற்கு அரியதன்மை – hard to

get

'ஓரொருகால் உள்வழியள் ஆகி,

நிறை மதி நீருள் நிழல் போல்

கொளற்கு அரியள்' (கலி.141:7-8)

(இ) நாள் நிழல் Nalnilal

(11) குறைதல், அழிதல் - shorten,

dissappear

'நளிகடல் தண்சேர்ப்ப நாள் நிழல்

போல விளியும் சிறியவர்

கேண்மை ' (நாலடி.166: 1-2)

(ஈ) அல்குநிழல் Alkunilal

(12) வளர்தல், பெருகுதல் - grow,

increase

'... .. .. .. விளிவின்றி அல்கு

நிழல்போல் அகன்றகன்று ஓடுமே

தொல் புகழாளர் தொடர்பு'

(நாலடி.166: 2-4)

(ஒப்பு) Shadow ஆன்மா , இறந்த

காலம், பாதுகாப்பு, பிரதிபலிப்பு,

பிம்பம், வாழ்க்கை ;இருள், இறப்பு,

தெளிவற்ற நிலை, பேய்.

நிறைகுடம் Niraikutam (full pot)

(1) அடக்கம் - modesty / humility

'கற்று அறிந்தார் கண்ட அடக்கம்

அறியாதார் பொச்சாந்து தம்மைப்

புகழ்ந்துரைப்பார் - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்'

(பழமொழி.9)


நீலம்


நிறைமதி நாள் Niraimati nal (full

moon)

(1) மங்கலம் - auspricous, festive

'மதிநாண் முற்றிய மங்கலத்

திருநாள்' (மணி.10: 83)

நீர் மொக்குள் (நீர்க்குமிழி) Nir mokkkul

(bubble)

(1) நிலையாமை, அழிவு - transitory,

impermanent

'விண்ணு - நீர் மொக்குளின்

விளியும் யாக்கையை'

(கம்ப, அயோ . 1135: 1)

நீரில் பிறழும் கெண்டையைச் சிறுசிரல்

ஏறியும் செய்கை Niril piralum

kentaiyaic ciruciral eriyum ceykai

(1) எளிமை - easy

'நிறைநீர் அகவயிற் பிறழும்

கெண்டையைச் சிறுசிரல் எறியும்

செய்கை போல உறுபுகழ்

உதயணன் தறுகண் மறவர் பற்றுபு

கொண்டு தம் கொற்றவற் காட்ட'

(பெருங் மகத.26: 21-24)


நீலம் Nilam (blue)

(1) பேரளவு - huge, large

'நீல நிறப் பெருங் கடல் கலங்க

உள்புக்கு' (நற்.45: 2)

(2) ஆழம் - deep

'நிவந்து ஓங்கு இமயத்து நீலப்

பைஞ் சுனை' (பரி.5: 48)

(3) வலிமை / ஆற்றல் | நிலைபேறு

- strong / powerful / stable,

permanent

'ஓர்த்த கருத்தும் உணர்வும்

உணராத மூர்க்கர்க்கு யாதும்

மொழியற்க - மூர்க்கன்றான்

கொண்டதே கொண்டு விடானாகும்

ஆகாதே உண்டது நீலம் பிறிது.'

(பழமொழி.94)

(4) உறுதி - firm

'தவம்தீர் மருங்கில் திருமகள்

போலப் பயம்தீர் மருங்கில்

பற்றுவிட்டு ஒரீஇ இட்டதை

உண்ணு நீலம் போல ஒட்டிடத்து

ஒட்டு உறுதி வாழ்க்கையுள்'

(பெருங். உஞ்.35: 137-140)


182