பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீலம்


(ஒப்பு) Blue அழகு, அமைதி,

அறிவு ஒளி, அன்பு, இசைவு,

இறைநிலை, உண்மை , உயர்பண்பு,

எல்லையற்ற பேரளவு, கடல்,

கடல் தெய்வம், கற்பு, குளிர்ச்சி,

கூட்டுறவு, தன்னடக்கம், தூய்மை,

நடுவுநிலைமை, நிலைபேறு,

நம்பிக்கை, நேர்மை, பணிவு,

புனிதத்தன்மை , மழை, மாயம்,

வானுலகம், வானுலகக் கடவுளர்,

வளம், வீரம்; அறியாமை.


நீலம் (மலர்) Nilam (a flower)

(1) தலைவி - heroine

'கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி

ஈர்வாளை நீலத்துப்

புக்கொளிக்கும் ஊரற்கு'

(ஐந். ஐம்.24: 1-2)

(2) குறிஞ்சித் திணை, கருமை -

mountain tract, black (blue)

'கை விரிந்தன காந்தளும்

பூஞ்சுனை மை விரிந்தன நீலமும்

வான் செய் நாண்' (சூளா. 17: 1-2)

(3) பொதுமகளிர் - prostitute

விரைசெய் தாமரை மேல்

விளையாடிய அரைச அன்னம்

அமர்ந்துள ஆயினும் நிரைசெய்

நீல நினைப்பில என்றனன்

வரைசெய் கோலமணம் கமழ்

மார்பினான்' (சீவக. 1401)

நீற்றறை Nirrurai (lime killer)

(1) வெம்மை - heat

'வெய்ய நீற்றறையது தான்

வீங்கிள வேனிற் பருவம்'

(பெரிய. 1368: 1-2)

நீறு Niru (ash)

(1) அழிவு, இறுதி - destruction, end

‘நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு

அழிய' (கம்ப.பால.12: 3)

(2) புனிதம் - holy |

'பூசு நீறுபோல் உள்ளும்

புனிதர்கள்' (பெரிய. 141: 2)

(3) தூய்மை - pure

'தூய நீறு புனை தொண்டர்கள்

என்ன ' (பெரிய,242: 6)

(4) ஒளி - bright, dazzle


நீறு


'நீற்றின் பேரொளி போன்றது

நீள்நிலா' (பெரிய 308; 4)

(5) வெண்மை - white

'வெண் திரு நீற்று முண்ட

வேதியர் மாதைத் தீண்டி'

(பெரிய,397: 3-4)

(6) சைவம் - saivism

'சைவ வெண் திரு நீற்று

முண்டகத்து ஒளி தழைப்பும்'

(பெரிய.508: 3-4)

(7) தொன்மை - ancient

'தொன்மைத் திரு நீற்றுத்

தொண்டின் வழிபாட்டின்'

(பெரிய.610: 1-2)

(8) பாதுகாப்பு - protection

'சேம நிலவு திருநீற்றின்'

(பெரிய 1023: 3)

(9) செம்மை - upright

'செம்மை வெண்ணீற்று

ஒருமையினார்' (பெரிய. 1212: 1)

(10) நன்மை - goodness

'நாகம் பூண் உகந்தானை

நலம்பெருகும் திருநீற்றின்'

(பெரிய, 1598: 5-6)

(11) அழகு, கடவுட்டன்மை - beautiful,

devine

'சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்

படுவது நீறு'

(திருஞான. தேவா.2794: 2)

(12) துயர் தீர்த்தல், சிறுமை தவிர்த்தல்,

உண்மை - remove affliction, avoid

degradation, truth

'வேதத்தில் உள்ளது நீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு போதம்

தருவது நீறு புன்மை தவிர்ப்பது

நீறு ஓதத் தகுவது நீறு

உண்மையில் உள்ளது நீறு'

(திருஞான. தேவா.2795:1-3)

(13) வீடுபேறு, துறவு, பக்தி, இனிமை,

அறிவாற்றல் - salvation,

renouncement, devotion, sweetness,

wisdom

'முத்தி தருவது நீறு முனிவர்

அணிவது நீறு சத்தியம் ஆவது

நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி

தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு

திருஆலவாயான் திருநீறே'

(திருஞான தேவா.2796)

(14) பெருமை, பாதுகாப்பு - greatness,

protection


183