பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நுகம்


'காண இனியது நீறு கவினைத்

தருவது நீறு பேணி

அணிபவர்க்கெல்லாம் பெருமை

கொடுப்பது நீறு மாணந் தகைவது

நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு

திருஆலவாயான் திருநீறே'

(திருஞான. தேவா.2797)

(15) புண்ணியம், புகழ் - blessed,

famous

'பூச இனியது நீறு புண்ணியம்

ஆவது நீறு பேச இனியது நீறு

பெருந் தவத்தோர்களூக்கெல்லாம்

ஆசை கொடுப்பது நீறு அந்தம

தாவது நீறு தேசம் புகழ்வது நீறு

திருஆலவாயான் திருநீறே'

(திருஞான. தேவா.2798)

(16) ஆற்றல் - power

'எயிலது அட்டது நீறு

இருமைக்கும் உள்ளது நீறு'

(திருஞான. தேவா.2800)

(17) பாவம் தீர்த்தல் - remove sin

'பராவணம் ஆவது நீறு பாவம்

அறுப்பது நீறு'

(திருஞான. தேவா.2801: 2)

(ஆ) சாம்பல் Campal

(18) அழிவு, இறப்பு, இறுதி

destruction, death, end

'மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக்

காவுளான் சடையும் பிறையும்

சாம்பல் பூச்சும் கீழ் உடையும்

கொண்ட உருவம் என்கொலோ'

(திருஞான தேவா.23)

நுகம் Nukam (yoke)

(1) ஆற்றல் - power

'ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த

மாவே' (நற்.58: 11)

(2) வலிமை - strong

.. .. .. .. வெம்போர் நுகம்

பிணித்த செங்கயிற்று ஒழுகை'

(குறு.80: 4-5)

(3) வெற்றி - victory -

'நும் நுகம் கொண்டு இனும்

வென்றோய்' (பதி.63: 15)

(4) கொடுமை, வளைவு - cruel, curve

'கொடு நுகம் - - பிணித்த

செங்கயிற்று ஒழுகை' (அகம்.329:6)


நுரை


(5) அசைவு - move -

'அசை நுகம் படாஅ ஆண்தகை

உள்ள த்து ' (புறம். 179:9)

(6) ஈகை | கொடை - benevolence,

- bounty

'எழு சமம் கடந்த எழு உறழ் திணி

தோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்

நுகம்' (சிறுபா.122-113)

(7) நடுநிலைமை - neutral, just

'கொடு மேழி நசை உழவர் நெடு

நுகத்துப் பகல் போல, நடுவு நின்ற

நல் நெஞ்சினோர்' (பட்,205-207)

(ஆ) பகல் Pakal

நடுநிலைமை - neutral, just

'பகல்போலும் நெஞ்சத்தார்

பண்பின்மை இன்னா' (இன்னா.8)

(ஒப்பு) Yoke இணைப்பு,

ஒழுக்கம், கட்டுப்படுத்தல், கிறித்து,

தியாகம், நடுநிலைமை, வளமை,

விதைப்பு; அடிமைத்தனம்,

கொடுமை, தடை, வரம்பு கடப்பு.

நுரை Nurai (foam)

(1) வளம் - flourish

'குறு நுரை சுமந்து, நறு மலர்

உந்தி ' (நற்.68: 4)

(2) நிலையாமை / அழிவு - unstable /

extinct

'கல்பொரு சிறுநுரை போல,

மெல்ல மெல்ல இல்லாகுதுமே'

(குறு.290; 5-6)

(3) இனிமை - sweet

'இன்நுரைச் செதும்பு அரற்றும்

செவ்வியுள்' (கலி.48: 18)

(4) மென்மை - soft

'நுரை முகந்தன்ன மென் பூஞ்

சேக்கை ' (அகம்.93:13)

(5) வெண்மை - white

'கள்ளிஅம் பேரியாற்று

வெண் நுரை கலங்க' (அகம்.149: 8)

(6) இலேசான தன்மை - light / float

'பால்கடை நுரையின் பரூஉமிதப்பு

அன்ன ' (அகம்.224: 6) -

(7) பயனின்மை , வீண் - waste, useless

நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு

நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும்

உண்டு ' (நாலடி.221: 3-4)

184