பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பசுக்களின் கழுத்திலுள்ள..


(2) வீரம் - volour )

'குரூஉக் கொடிப் பகன்றை சூடி,

மூதூர்ப் போர் செறி மள்ளரின்

புகுதரும் ஊரன்' (அகம்.316: 6-7)

பசுக்களின் கழுத்திலுள்ள மணிகள்

வீழ்தல் Pacukkalin kaluttilulla manikal

viltal (bells falling from cows neck)

(1) தீமை - evil omen

'நான்முலை யாய நடுங்குபு

நின்றிரங்கும் மான்மணி வீழும்

வருவதொன்று உண்டு' (சிலப்.17:

4. 1-2)

பசுத்திரள் மெய் நடுங்கி நிற்றல்

Pacuttiral mey natunki nirral (shivering

herds)

(1) தீமை - evil omen

'நான்முலை யாய நடுங்குபு

நின்றிரங்கும்' (சிலப்.17: 4.1)

பசு மண்கலம் Pacu mankalam (clay

pot)

(1) நிலையாமை / அழிவு

'ஈர் மண் செய்கை நீர் படு பசுங்

கலம் பெரு மழைப் பெயற்கு

ஏற்றாங்கு, எம் பொருள் மலி

நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே'

(நற் 308: 8-10)

பசுமரத்து ஆணி அறைதல்

Pacumarattu ani araital

(1) மனவுருக்கம் - melting of heart /

touching

'பசுமரத்து ஆணி அறைந்தால்

போலக் கசிவது பெருகிக் கடல்

என மறுகி' (திருவா.4: 65-66)

பசுமரம் சார்தல் Pacumaram cartal

(1) நண்பன் உயிருடன் இருத்தல்

(prediction of friend being alive)

'துனிவுகொள் மன்னற்கு முனிவன்

கூறும் பசுமரம் சார்ந்தனை

ஆதலின் மற்றுநின் உசிர்ப்

பெருந்தோழன் உண்மையும்

கூட்டமும் கண்ணகன்று உரைந்த

கடிநாள் அமையத்துத் திண்ணி


பட்டம்


தாகும் தெளிந்தனை ஆகுமதி'

(பெருங்.இலா.13: 49-53)

பஞ்சவடி Paicavati (a place)

(1) குளிர்ச்சி, கடவுட்டன்மை - cool,

holy

'பனி தரு தெய்வப் பஞ்சவடி

எனும் பருவச் சோலை'

(கம்ப ஆரண்.224: 2)

பஞ்சி Panci (cotton)

(1) மென்மை - soft

'பஞ்சி மெல் அடி

நடைபயிற்றும்மே !' (நற்.324:9)

(2) காப்பின்மை - unprotected

'பெருமலை நாட! பிறரறிய லாகா

அருமறையை ஆன்றோரே காப்பர் -

அருமறையை நெஞ்சிற் சிறியார்க்

குரைத்தல் பனையின்மேல்

பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று'

(பழமொழி.181)

(3) மெலிவு / மெல்லிய தன்மை -

slender / tender

'பஞ்சியின் மெல்லிதேனும் பகை

சிறிதென்ன வேண்டா அஞ்சித் தற்

காத்தல் வேண்டும் அரும்

பொருளாக என்றான்' (சீவக.1894:

3-4)

(ஆ) பஞ்சு தீயிடைப்படல் Pancu

tiyitappatal (cotton in fire)

(3) அழிவு - destruction

'வெஞ்சுடர்ப் பெருந்தீயினில்

விழுத்திய ஏடு பஞ்சு தீயிடைப்

பட்டது படக்கண்டு பயத்தால்'

(பெரிய 2691: 2-3)

பஞ்சுரம் Pancuram (a melody)

(1) இரங்கல் - mourning

வெஞ்சுரம் செல்வோர் வினைவழி

அஞ்சப் பஞ்சுர ஓசையில்

பையெனப் பயிரும்'

(பெருங். மகத 1: 160-161)

பட்டம் (பட்டு ) Pattam (silk)

(1) மென்மை - soft


189