பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பருந்து

(ஊ) எழால் Elal

(13) தீமை - evil

'வங்காக் 'கடந்த செங்காற் பேடை

எழால் உற வீழ்ந்தென'

(குறு.151: 1-2)

இறப்பு - death

'மாவும் மாக்களும் படு பிணம்

உணீஇயர், பொறித்த போலும்

புள்ளி எருத்தின் புன்புற எருவை

பெடை புணர் சேவல் குடுமி

எழாலோடு கொண்டு, கிழக்கு

இழிய' (பதி.36:7-10)

(எ) பாறு Paru

(14) கூடியுண்ணல் - communal feeling

'பாறு கிளை பயிர்ந்து படுமுடை

கவரும்' (அகம்.175: 5)

(ஏ) கலுழன் Kalulan

(15) சினம் – wrath / anger

'கருந்திண் நாகத்தை நோக்கிய

கலுழனின் கனன்றான்'

(கம்ப.சுந்.1099: 2)

(ஐ) கருடன் Karutan

வலிமை - strength

'ஐம்பதினாயிரர் அளவு இல்

ஆற்றலர் மொய்ம்பினின் எறுழ்

வலிக் கருடன் மும்மையார்'

(கம்ப .சுந்.1056: 3-4)

(16) விரைவு, வெற்றி, திறன் - speed,

victory, capability

'கால் ஆர்ந்த கதிக் கருடன்

என்னும் வென்றிக் கடும்பறவை

இவை அனைத்தும்' (நாலா.654: 4-

5)

(ஓ) கருடன் இடப்பக்கம்

செல்லுதல் Karutan itapakkam cellutal

(eagle flying to the left)

(17) நன்மை - good omen

'உலங்கொண்ட மணிப்புயனே

பிரம்பூரா னந்த ரங்கா உன்பால்

செல்ல வலங்கொண்ட கருடனை

யாம் இடங்கண்டோம்

எழினரையான் வலத்தே

கண்டோம்' (தனிப்.666)

(ஔ) புள் Pul (கருடன்)

பல்லி ஒலித்தல்


விரைவு - speed

'வேகப் புள்ளின் வெவ்விசை

கேட்ட' (பெருங் உஞ்.44: 44)

(ஒப்பு) Eagle, Falcon, Hawk,

Vulture அரசத்தன்மை , அறிவு,

ஆன்மா, ஆழ்ந்து நினைதல்,

இறைநிலை, உயர்பண்பு, உயரம்,

ஒளிக்கொள்கை, கவனமாகப்

பார்த்தல், காற்று, கிறித்து,

சூரியன், தன்னடக்கம்,

தன்னம்பிக்கை, தந்தை, தாய்மை,

தைரியம், தோற்ற உயர்வு,

நிலைபேறுடைமை, நீண்டநாள்

வாழ்வு, நெருப்பு, நேர்மை,

மறுபிறப்பு, மேன்மையான

ஆற்றல், வலிமை, வளமை,

வானுலகம், வேகம்; இறப்பு,

கடுங்கழிவிரக்கம், காலந்தாழ்த்தல்,

செருக்கு, தண்டனை, தீமை,

பகை, பழிதீர்வு, பொறாமை.

பல்லி Palli (lizard)

(1) உறுதி, பற்றுதல் - firm, hold

'பொருந்தலால் பல்லி போன்றும்'

(சீவக. 1895)

(2) பற்று - bind

'பல்லி நுண் பற்றாக உடைவாள்

சாத்தி' (நாலா.255:3)

பல்லி ஒலித்தல் Palli olittal

(1) முன்னறிவிப்பு - prediction

'ஓங்கு மலை வியன் புனம்

படீஇயர், வீங்குபொறி நூழை

நுழையும் பொழுதில், தாழாது

பாங்கர்ப் பக்கத்துப் பல்லி

பட்டென' (நற்.98: 3-5)

(2) நன்மை , தலைவன் வரவு - good

omen, hero's arrival

... ... பருவரல்தீரப் படுங்கொல்

வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி'

(நற்.169: 2-3)

(3) நன்னிமித்தம் – good omen

.. .. .. .. மனைவயின் பல்லியும்

பாங்கு ஒத்து இசைத்தன'

(கலி.11: 20-21)

(4) முன்னறிந்து கூறல் - foretell

'கள்ளி முள் அரைப் பொருந்தி,

செல்லுநர்க்கு உறுவது கூறும் சிறு


192