பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம்

(ஈ) துகிர் Tukir

(2) சிவப்பு நிறம், தூய்மை - red,

purity

'மை இல் செந்துகிர்க் கோவை'

(கலி.85: 4)

(ஒப்பு) Coral கிறித்து சிலுவையில்

பட்ட துன்பங்கள், குருதி,

செவ்வாய்க்கோள், நன்மை.

பழம் Palam (fruit)

(1) இனிமை - sweetness

செங் காற் பலவின் தீம்பழம்

மிசையும்' (நற்.232: 5)

(2) வளம் - luxuriant

'கழனி மாஅத்து விளைந்து உகு

தீம் பழம்' (குறு.8: 1)

(3) போக இன்பம் - conjugal pleasure

'கைப்பழம் இழந்த மந்தி

கட்டியங்காரன் ஒத்தது இப்பழம்

துரந்து கொண்ட சிலதனும்

என்னை ஒத்தான் இப்பழம் இன்று

போகத்து இன்பமே போலும்

என்று மெய்ப்பட உணர்வு

தோன்றி மீட்டிது கூறினானே'

(சீவக.2726)

(4) மகளிர் - women / feminity

'நல்வினை என்னும் நன்பொன்

கற்பக மகளிரென்னும் பல்பழ

மணிக்கொம்பீன்று பரிசில்

வண்டுண்ணப் பூத்து' (சீவக.2728:

1-2)

(ஆ) கனி Kani

இனிமை - sweetness

'.. .. .. .. கடுவன் ஊழுறு தீம்கனி

உதிர்ப்பன' (குறு.278: 4-5)

(5) இனிய சொல் - sweet words

'இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்ப காய் கவர்ந்தற்று'

(குறள். 100)

(6) இன்பம் - joy

'துனியும் புலவியும் இல்லாயின்,

காமம் கனியும் கருக்காயும் அற்று'

(குறள்.1306)

(7) மூத்தோர் / முதுமை - aged /

seniors

'மற்றறிவாம் - நல்வினை

யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது


பள்ளம் புகும் புனல்


அறம்செய்ம்மின் முற்றியிருந்த

கனியொழியத் தீவளியால் நற்காய்

உதிர்தலும் உண்டு' (நாலடி.19)

(8) அழகு - beauty

'அருமுகத்த கனி ஆயின எல்லாம்'

(சூளா .1583: 1)

(9) பயன் - use

'கனிப்பொறை மலிந்து நின்ற

கற்பகப் பூங்கொம்பு ஒத்தார்'

(சீவக.2541: 4)

(10) அன்பு

'மாட்சி நீரின் மாண்சினை

பல்கிய வேட்கை என்னும்

விழுத்தகு பெருமரம் புணர்ச்சிப்

பல்பூ இணர்த்தொகை ஈன்று

நோயி லின்பக் காய் பல

தூங்கியாழ வற்புக்கனி யூழறிந்

தேந்த' (பெருங்.வத்.9: 73-77)

(இ) காழ் இல் கனி Kal il kani

(seed less fruit)

(11) அன்பு / காமம் - love / passion

'தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர்

பெற்றாரே, காமத்துக் காழ் இல்

கனி' (குறள்.1191)

(ஒப்பு) Fruit அமைதி,

அறிவுநுட்பம், ஆன்மீக வளம்,

நிறைவளம், பாக்கியம்,

பெருந்தகைமை, முடிவு, மூல

வளமை, வானுலக வாழ்த்து.

பழத்தின் இரதம் Palattin iratam (fruit

juice)

(1) இறைமை, கடவுட்டன்மை - god,

devine

'பருகா அமுதமாம் பாலின்

நெய்யாம் பழத்தின் இரதமாம்

பாட்டில் பண்ணாம் ஒருகால்

உமையாளோர் பாகனுமாம்'

(திருநா.தேவா.897:3-5) -

பள்ளம் புகும் புனல் Pallam pukum

punal (water flowing to ditch)

(1) தடையின்மை , விரைவு

unobstructed, speed

'உள்ளம் புகுமொருகாற்

பிரியாதுள்ளி உள்ளுதொறும்

பள்ளம் புகும்புனல் போன்றகத்

194