பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளி மாறிய பாடையும் எலும்பும்

தேவரும் பான்மையளே'

(திருக்கோ .25: 379. 3-4)

(ஆ) பள்ளம் படரும் நீர் Pallam

patarum nir

விரைவு - fast, quick

'இன்னே போது மேகுமின்

விரைந்தெனப் பள்ளம் படரும்

பன்னீர் போலவன்'

(பெருங். மகத.1: 88-89)

பள்ளி மாறிய பாடையும் எலும்பும்

Palli mariya pataiyum elumpum

(1) கடுமை - severity

'பள்ளி மாறிய பாடையும்

எலும்பு மே பரந்து கள்ளி

யாரிடைக் கலந்ததோர் தோற்றமும்

கடிதே' (நீலகேசி.30: 3-4)

பளிக்கறை மண்டபம் Palikkarai

mantapam (marble hall)

(1) தெளிவு - clear / transparent

'விளிப்பறை போகாது

மெய்புறத்து இடூ உம் பளிக்கறை

மண்டப முண்டத னுள்ளது'

(மணி.3: 63-64)

பளிங்கு Palinku (marble)

(1) உயர்வு / ஒளி - lofty/ bright

'ஒளிறு வான் பளிங்கொடு செம்

பொன் மின்னும்' (நற்.292: 6)

(2) தூய்மை | மாசின்மை /

குற்றமின்மை - spotless / pure /

blemishless -

'மை இல் பளிங்கின் அன்ன

தோற்ற' (அகம்.399: 13)

(3) வெளிப்படை | தெளிவு -

revealing / obvious

'அடுத்தது காட்டும் பளிங்குபோல்

நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்'

(குறள்.706)

(4) மென்மை - soft

'மெய்ப் போதின் நங்கைக்கு அணி

அன்னவள் மென் பளிங்கில்'

(கம்ப பால.851: 1)

(ஒப்பு) Marble, Crystal, Quartz

அழகு, அறிவுநுட்பம், ஆன்மா,


பறை

உரிமை, உள்ளுணர்வால் அறிகிற

ஆற்றல், ஊடுருவல்,

எண்ணங்களின் ஒளியுருவல்

நிலை, கடவுள், திறம், தூய்மை ,

நிலைபேறு, நீடிப்பாற்றல், நேர்மை,

முழுமை, வழிபாடு, விண்ணுலகப்

பொருள்கள், வெற்றி.

பறத்தல் Parattal (flying)

(1) விரைவு | வேகம் - quick, fast

'பறத்தரல் விசையினும்

பண்ணினும் மண்மிசை'

(பெருங். உஞ்.48: 72)

பறை Parai (drum)

(1) ஓசை - sound

'இழுமென இழிதரும் பறைக் குரல்

அருவி' (பதி.70: 24)

(2) நினைவு, நினைத்தல் - thought,

thinking

'ஓர்த்தது இசைக்கும் பறை போல்,

நின் நெஞ்சத்து வேட்டதே

கண்டாய், கனா' (கலி.92: 21-22)

(3) ஒலி, அறிவித்தல் - noise,

announce

'அறை பறை அனைய நீரோர் அரு

மறைக்கு ஆவரோதான்'

(கம்ப.பால.966: 4)

(ஆ) பறை அறைதல் Parai araital

(drumming)

(4) வெளிப்படுத்தல் - reveal, disclose

'அறை பறை அன்னர் கயவர் - தாம்

கேட்ட மறை பிறர்க்கு உய்த்து

உரைக்கலான்' (குறள். 1076)

(5) மறைபொருளைப் புலப்படுத்தல் -

reveal a secret

'மறை பெறல் ஊரார்க்கு அரிது

அன்றால் - எம்போல் அறை பறை

கண்ணார் அகத்து' (குறள்.1180)

(இ) பறைக்குக் காப்பிடல்

Paraikkuk kappital

(6) மறைபொருளைக் காத்தல் - keep

secret

'வெள்ளமாண் பெல்லாம் உடைய

தமரிருப்ப உள்ளமாண் பில்லா

ஒருவரைத் - தெள்ளி மறைக்கண்

பிரித்தவரை மாற்றா தொழிதல்

195