பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாம்பு


ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற்

புத்தோடு தண்ணீர்க்குத் தான்

பயந்தாங்கு' (நாலடி.139)

பாம்பு Pampu (snake)

(1) இறப்பு - death

'.. .. .. அழல் உமிழ் அகன் பை

பாம்பு உயிர் அணங்கியாங்கும்'

(நற்.75:2-3)

(2) கடுமை - fierce

'கடும் பாம்பு வழங்கும் தெருவில்'

(குறு.354: 5)

(3) வலிமை - strong

'பாம்பு மதன் அழியும் பானாட்

கங்குலும்' (அகம்:8: 4)

(4) விரைவு - fast |

'தண் நில மருங்கில் போழ்ந்த

வழியுள், நிரை செல் பாம்பின்

விரைபு நீர் முடுக'

(அகம்.324: 12-13)

(5) சினம் - wrath

'தாங்காச் சினத்தொடு காட்டி

உயிர் செகுக்கும் பாம்பும் அவைப்

படில், உய்யுமாம்' (கலி.140: 21-22)

(6) அச்சம் - fear

'அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு

கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும்'

(திருமுரு.149-150)

(7) தீமை | அன்பின்மை - evil /

affectionless

'உடம்பாடு இலாதவர் வாழ்க்கை

குடங்கருள் பாம்போடு உடன்

உறைந்தற்று' (குறள்.390)

(8) பகை - enmity

'தெற்றப் பகைவர் இடர்ப்பாடு

கண்டக்கால் மற்றுங்கண்

ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற

நவைக்கப் படுந்தன்மைத் தாயினும்

சான்றோர் அவைப்படின் சாவாது

பாம்பு' (பழமொழி. 86)

(9) வஞ்சனை - deceive

'தலைமை கருதும் தகையாரை

வேந்தன் நிலைமையால் நேர்செய்

திருத்தல் - மலைமிசைக்

காம்பனுக்கும் மெந்தோளாய்!

அஃதன்றோ ஓரறையுள்

பம்போடுடனுறையும் ஆறு'

(பழமொழி. 253)

(10) ஆற்றல் - power


பாம்பு


'சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்துங்

கெட்டாலும் நேர்த்துரை போஒய்த்

தனித்தாயக் கண்ணும்

இளைதென்று பாம்பிகழ்வா ரில்'

(பழமொழி. 277)

(11) துன்பம் - misery

'பரீஇ உயிர்செகுக்கும்

பாம்பொடும் இன்னா மரீஇப்

பின்னைப் பிரிவு' (நாலடி.220)

(ஆ) அரவு Aaravu

துன்பம் - pain

'அணங்குடை அரவின் ஆர் இருள்

நடு நாள்' (நற்.168: 8)

(12) விடத்தன்மை / நச்சுத்தன்மை -

poisonous

'கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை

பனிப்ப (புறம்.17:38)

சினம் - anger

'வெஞ்சின அரவின் பைந்தலை

துமிய' (குறு.190: 4)

அச்சம் - fear

'அரவு இரை தேரும் அஞ்சுவரு

சிறுநெறி' (அகம்.258: 10)

(13) கொடுமை - cruel

கொடியோர் இன்று, அவன்

கடியுடை வியன்புலம் உருமும்

உரறாது; அரவும் தப்பா '

(பெரும்.41-42)

பகை - enmity

'அரவுக் குறும்பு எறிந்த சிறுகட்

தீர்வை ' (மலை .504)

(14) கொல்லும் தன்மை - killing

'கொல்லும் அரவின் மயங்கிச்

சிறியார் கொண்ட தொடர்பின்'

(சீவக. 1416.3)

(இ) அரா Ard

வலிமை - strong

'பகைவர் பணிவிடம் நோக்கித்

தகவுடையார் தாமேயும் நாணித்

தலைச்செல்லார் காணாய்

இளம்பிறை ஆயக்கால் திங்களைச்

சேராது அணங்கருந் துப்பின் அரா'

(நாலடி.241) |

துன்பம், தீமை, விடத்தன்மை -

affliction, evil, poisionous -

'அணங்கு வாள் விட அரா

அணுகும் எல்லையும் குணம்

கெடது ஒளி விரி குளிர் வெண்

199