பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(குறு:122.2-3), ஆன்மணிக் குரலொளித்தலும் (நற்.3647.11) துன்பத்தையும் மாலைக் காலத்தையும் சுட்டுகின்றன.இடம் வீழ்தல் (இடப்பக்கம் விழுதல்) இழிவு / சிறப்பின்மையைத் தருகின்றது (அகம்.29.2-4)

16) சொல்,வினை என்பதுடன் குறைச் சொற்றொடரும் (phrase) பொருண்மைத் தொடர்பால் குறியீடாகின்றமை காணப்படுகிறது. மரபுத் தொடர் (idiom),பழமொழி (proverb) என்பன குறியீட்டுத் தன்மை புலப்படுத்துதற்கு இங்கு அடிப்படை அமைகின்றது எனலாம். உமிக்குற்றுக்கைவருந்துதல் (பழ348)- பயனின்மை; இருதலைப் புள்ளின் ஓர் உயிர் (அகம்.12.4-5)- நட்பு / பிரிவின்மை; இருதலைக் கொள்ளி...உறவி (எறும்பு) (அகம்.339.6-10} உறுதியின்மை / துன்பம்; எழுகுளிறு மிதித்த ஒரு பழம்(குறு.24.3-5)- சிதைவு / அழிவு,நாய் சிவிகை ஏற்றுவித்தல் (திருவா.51.93) - தகுதியின்மை எனப் பல இப்பாங்குப் புலப்படுத்துகின்றன.

தொடர்பு அடிப்படைக் குறியீடாகச் சுட்டப்பட்ட இவ்வகைப்பாடுகள், விரிவுக்கும், மயங்குதலுக்கும் இடமளிக்கக் கூடும்.

ஒப்புமை

உவமை,உருவகம்,உள்ளுறை என ஒப்புமை அடிப்படையில் அமையும் வெளியீடுகளில்,குறியீட்டு தேர்ச்சிக் களன் அமைகின்றது.

எல்லா உவமையும் குறியீடாகாது. உவமை-உவமிக்கப்படும் பொருள் என்ற ஒப்புமை பார்க்கப்படாது,உவமை-பொதுத்தன்மை எனப் பார்த்து அருவமான தன்மை,பண்பு என்பன உணர்த்தப்படும் போருன்மையாகக் கொள்ளப்படுவது இங்கு புலப்படுகின்றது. "பகைமன்னன் போல் இளவேனில் வந்தது" என்பதால் இளவேனில், துன்பத்துக் குறியீடாகிறது.

பீடு இலா அரசன் நாட்டு ஏதிலான் படைபோல

இருத்தந்தது இளவேனில் (கலி.27,7-8)

நிலம் பொறுமைக்குக் குறியீடாதல் (குறள்.151), ஊற்றுக்கோல் உதவிக்குக் குறியீடாதல் (குறள்,415) எலி இழிவுக்கும் தீயமுயற்சிக்கும் குறியீடாதல்(புறம்,1901-3),கடல் கீழ்மைக்குக் குறியீடாதல் (பழ.90) எனப் பலவகைச் சான்றமையும்.

உவமையின் செறிவாக அமையும் உருவகத்திலும், அருவப் பண்பு நிலை விளக்கம் பெறும்போது குறியீட்டுப்பாங்கு புலப்படுகிறது.

காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்

நானுத் தாழ் வீழ்த்த கதவு

(குறள்.1251)

என்பதில் கணிச்சி,தாழ்,கதவு என மூன்று குறியீடுகள் காமம்,நாணம், நிறை என்னும் பண்பு விளக்கி வருகின்றன.உவமை,உருவகம்,என இரண்டிலும் ஒரே குறியீடு தேரப்படமுடிவதுமுண்டு. கடல்,காமத்திற்கு குறியீடாவது சான்று.

கடலன்ன காமம் உழந்தும்..... (குறள்.1137)

காமக்கடல் மன்னும் உண்டே... (குறள்.1164)

சொல்வலை (புறம்.2525),கங்குல் வெள்ளம் (குறு.387.5), பிறவிப் பெருங்கடல் (குறள்.10),உரனென்னும் தோட்டி(குறள்24),குணமென்னும் குன்று (குறள்.29),அருட்செல்வம் (குறள்.241),ஏமப்புணை (குறள்.306), கற்புக்கனல்,அருள்மாரி,பகை வெள்ளம்,காமச்சுறவு (திருவா24.46) எனப் பல,உருவக அடிப்படையில் குறியீட்டைத் தேரக் களன் வழங்கும்

xxvii