பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாம்பு


திங்கள் போல்' (கம்ப. அயோ.138: 1-

2)

(ஈ) நல்அரா கதுவல் Nalara

katuval (snake bite)

துன்பம் - suffering|

‘நல்அராக் கதுவியாங்கு, என்

அல்லல் நெஞ்சம் அலமல்க்குறுமே'

(குறு.43: 4-5)

(உ) பாப்பு Pappu

தீமை - evil

'படர் சிறைப் பல் நிறப் பாப்புப்

பகையைக் கொடியெனக் கொண்ட

கோடாச் செல்வனை'

(பரி.13: 38-39)

(15) திறல் - capacity / capability

'.. .. .. .. கடுந் திறல் பாப்புக்

கடுப்பு அன்ன தோப்பி வான்

கோட்டு' (அகம்.348: 6-7)

(ஊ) நாகம் Nakam

ஆற்றல் - power

'நாகம் நாணா, மலை வில்லாக'

(பரி.5: 24)

அச்சம் - fear

'ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்'

(பரி.12: 4)

(16) நச்சுத்தன்மை /விடம், வேகம், திறல்

- poisonous, quickness, capacity

'நஞ்சுடை வால் எயிற்று, ஐந்

தலை சுமந்த, வேக வெந் திறல்,

நாகம் புக்கென' (புறம்.37: 1-2)

சினம் - wrath

'கதநாகம் புற்றடையக் காரேறு சீற'

(திணைமாலை.177)

(17) வலிமை - prowess

'பையுடை நாகப்பகைக்

கொடியானுக்குப் பல்லாண்டு

கூறுவனே ' (நாலா.8: 7-8)

(18) காலம் | நேரம் - time

'சுமைத்தயிர் வேய்ந்த சோற்றில்

துய்த்து இனிதாக நம்மை

அமைத்தநாள் என்னும் நாகம்

விழுங்கப்பட் டன்ன தங்கண்'

(சீவக.2617: 1-2)

(எ) உரும் எறி பாம்பு Urum eri

pampu (thender struck snake)


பாம்பு


(19) துன்பம் - affliction

‘பருமப் பனைஎருத்தின் பல்யானை

புண்கூர்ந்து உரும் எறி பாம்பின்

புரளும்' (களவழி.38: 1-2)

(ஏ) அருமணி இழந்த நாகம்

Arumani ilanta nakam (snake, losing

gem)

(20) துன்பம் - affliction -

'அருமணி இழந்த நாகம்

போன்றதும் இன்னுயிர் இழந்த

யாக்கை யென்னத் துன்னிய சுற்றம்

துயர்க்கடல் வீழ்ந்ததும்' (சிலப்.13:

58-60)

(21) தவிப்பு , துன்பம் - distress,

affliction -

'அருமணி இழந்தோர் நாகம்

அலமருகின்றது ஒத்தாள்' (சீவக.

1508.4)

(ஐ) இடியேறுண்ட நாகம்

Itiyerunta nakam

துன்பம் - affliction

'இடியேறுண்ட நாகம் போலக்

கொடியேர் சாயல் கொழுங்கவின்

வாட' (பெருங். இலா. 10: 112-113)

(ஓ) நன்மணி_இழந்த நாகம்

Nanmani ilanta nakam

துன்பம், துயரம் - sorrow, grief

'நன்மணி இழந்த நாகம்

போன்றவள் தன்மகள் வாராத்

தனித்துயர் உழப்ப' (மணி.7: 131-

132)

(ஓ) நச்செயிற்று அரவின் நோக்கு

Nacceyirru aravin nokku (poisonous

snake's look)

(22) அச்சம், நடுக்கம் - dread, tremble

'நச்செயிற்றரவின் நோக்கின்

மன்னரை நடுங்க நோக்கி'

(சீவக.2494: 1)

(ஔ) புற்று அடங்குஅரவு

Purru atanku aravu(snake in (termite)

mound)

(23) மறைவு - hidden / concealed

'புற்றடங்கு அரவின் புக்கொளித்து

அடங்கினன்' (மணி.20: 80)

200