பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பால்

'உருவப் பிழம்பப் பொருளென்

றுரைப்பனிப் பால் தயிர் மோர்

பருவத்தினாம் பரியாயப்

பெயரென்பன் - பாலழிந்து

தருவித்து உரைத்த தயிர் உருவாய்

மும்மைத் தன்மையதாம்

திருவத்ததென் பொருளாதலைத்

தேர தெளியிதென்றாள்'

(நீலகேசி.387)

(ஆ) சிந்திய பால் Cintiya pal (split

milk)

(11) வீண் - ruin, waste

'கன்றும் உண்ணாது, கலத்தினும்

படாது, நல்ஆன் தீம்பால் நிலத்து

உக்கா அங்கு, எனக்கும் ஆகாது,

என்னைக்கும் உதவாது'

(குறு.27: 1-3)

(இ) பாலுண்ணல் Palunnal (drink

milk)

(12) நலன் நுகர்தல் - physical

enjoyment

'தீம் பால் உண்பவர் கொள் கலம்

வரைதல்' (கலி.133:17)

(ஈ) நெய்கடை பால் Neykatai pal

(churned milk)

(13) பயனின்மை - unuseful

'நெய் கடை பாலின் பயன் யாதும்

இன்றாகி' (கலி.110:17)

(உ) பால் நவன் (புதியதாய்

கறந்த பால்) Pal nalan (new milk)

(14) இறைமை - godhood

'கானவனைக் கயிலாய

மலையுளானைக் கலந்துருகி

நைவார்தம் நெஞ்சினுள்ளே

பானவனைப் பள்ளியின்

முக்கூடலானைப் பயிலாதே பாழே

நான் உழன்றவாறே'

(திருநா.தேவா. 1444: 5-8)

(ஊ) பாம்புண்ட பால் Pampunta

pal

(15) நச்சுத்தன்மை , குற்றம் - poisonous,

fault


பாலை


'பலம்படு முரைநினக்குப்

பாம்புண்ட பாலேபோல்'

(நீலகேசி.293: 4)

(எ) பிரை உண்ட பால் Pirai

unta pal (split milk)

(16) கலக்கம் - anxiety, confusion

'பிரை உண்ட பாலின் உள்ளம்

பிறிதும் பிறர் முன் சொல்லா'

(கம்ப.யுத்.2111:3)

(ஒப்பு) Milk அறிவாற்றல்,

உண்மை , உயிரின் மூல, ஊட்டம்,

தாய்மை, தியாகம், தூய்மை,

நற்பேறு, நிலைபேறு, நிறைவளம்,

மறுபிறப்பு, மனித உணர்வு, மனித

நேயம், விந்து, வெண்மை .

பால் உறையாதிருத்தல் Pal uraiyatiruttal

(unset milk)

(1) தீமை - evil omen

'குடப்பால் உறையா குவி

இமிலேற்றின் மடக்கணீர் சோரும்

வருவதொன்று உண்டு' (சிலப். 17:

2. 1-2)

பால் நுரை Pal nurai (milk bubbles)

(1) மென்மை , நொய்ம்மை - soft,

fragile

'பால் நுரையின் நொய்ய அணைப்

பைங்கதிர்கள் சிந்தி' (சீவக.2490:

1)

பாலும் தேனும் Palum tenum (milk and

honey)

(1) நட்பு / அன்பு - friendship / love

'ஆன் முலைப் பிறந்த வானிற

அமிர்தம் மலைப்பெய் நெய்யொடு

தலைப் பெய்தாங்கு வேறுபட்டு

இயலா அன்பினின் அளை இய

நண்பின் அமைதியும்'

(பெருங்.இலா.8: 11-14)

பாலை (நிலம்) Palai (dry land)

(1) பாலை - seperation

'இரு வகைப் பிரிவும் நிலைபெறத்

தோன்றினும் உரியதாகும்

என்மனார் புலவர்' (தொல்.957)


202