பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிடிகை

பொலன் அணி கொன்றையும்

பிடவமும் உடைத்தே ' (ஐங்.435: 3)

பிடிகை Pitikai|

(1) விரைவு

'காலிரும் பிடியும் கடுங்கால்

பிடிகையும்' (பெருங் உஞ்.38: 12)

பித்திகம் Pittikam (jasmine)

(1) கார்ப்பருவம் - rainy season

பெருந்தண் மாரிப் பேதைப்

பித்திகத்து அரும்பே முன்னும்

மிகச்சிவந் தனவே' (குறு.94: 1-2)

(2) மாலைப்பொழுது - evening -

'செவ்வி அரும்பின், பைங் காற்

பித்திகத்து, அவ் இதழ் அவிழ்

பதம் கமழ, பொழுது அறிந்து'

(நெடு.40-41)

பிரம்பின் கனி Pirampin kani (cane-

fruit)

(1) தலைவன் - hero

'அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற

விளை கனி குண்டுநீர் இலஞ்சிக்

கெண்டை கதூஉம்' (குறு.91:1-2)

பிள்ளை (காரிப்புள்) Pillai (a bird)

(1) அழிவு - bad omen

'பிள்ளை உள்புகுந்து அழித்தது

ஆதலால்' (சீவக.420: 1)

பிள்ளை நகுலம் (கீரி) Pillai nakulam

(mongoose)

(1) பிழையற்றவர்க்குத் தண்டனை -

innocent punished

'பிள்ளை நகுலம் பெரும் பிறிதாக

எள்ளிய மனையோள் இனைந்து

பின் செல்ல வடதிசைப் பெயரும்

மாமறையாளன்' (சிலப். 15: 54-56)

பிறை விசும்பிலாத அந்தி

Pirai vicumpilata anti (eresentless

evening)

(1) மகப்பேறின்மை - childless

'மிக்கிளம் பிறை விசும்பிலாத

அந்தியும் மக்களை இலாததோர்

மனையும் ஒக்குமே' (சூளா.413)


புகை


பீரம் Piram (a flower)

(1) கார்காலம் - rainy season

‘மாரிப் பீரத் தலர்சில கொண்டே

(குறு.98: 5)

(2) அழகு - beauty

'... .. .. .. பீரத்து எழில் மலர்

புரைதல் வேண்டும்' (அகம்.45: 7-8)

புகார் Pukar (a city)

(1) போகம், புகழ் - worldy pleasure,

fame

'போகநீள் புகழ்மன்னும் புகார்

நகரது தன்னில்' (சிலப். 1:22)

(2) செல்வம், வளம் - wealth,

luxurious

'இருநில மன்னற்குப் பெருவளம்

காட்டத் திருமகள் புகுந்ததிச்

செழும்பதியாம் என' (சிலப்.5: 212-

213)

(3) சிறப்பு, நிலைபேறு - eminence,

stability

'பதி எழு அறியாப் பழங்குடி

கெழீ இய பொது அறு சிறப்பின்

புகாரே ஆயினும் நடுக்கு இன்றி

நிலைஇய என்பது அல்லதை

ஒடுக்கம் கூறார்' (சிலப்.1: 15-18)

(4) அழகு, புகழ், நிலையாமை -

charm, fame, unstable

'பூம்புகார் போற்றுதும்' (சிலப். 1:

10)

புகை Pukai (smoke)

(1) இயக்கம் - movement

கொழு மீன் சுடு புகை மறுகினுள்

மயங்கி' (நற்.311: 6)

(2) நிலையாமை - unstable

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ்

புகை ' (பரி.17:30)

(3) நுட்பம் - minute

'நீரினும் நுண்ணிது

நெய்யென்பார், நெய்யினும் யாரும்

அறிவர் - புகைநுட்பம் தேரின்

நிரப்பிடும்பை யாளன் புகுமே,

புகையும் புகற்கரிய பூழை

நுழைந்து' (நாலடி.282)

(ஆ) ஆவி Avi (vapour)

(3) நெட்டுயிர்ப்பு | ஏக்கம் - sigh /

longing

206