பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகைக்கொடி தோன்றுதல்


'கேள்வி அந்தணர் கடவும் வேள்வி

ஆவியின் உயிர்க்கும் - என்

நெஞ்சே ' (கலி.36: 25-26)

(ஒப்பு) Smoke, Incense அன்பு,

ஆன்மா, உயிர்ப்பூட்டுதல்,

தியாகம், தீமைகளை அழித்தல்,

தூய்மை, தெய்வத்தன்மை,

பாதுகாப்பு, புனிதத்தன்மை; அறிவு

இருளடைதல், சினம், தண்டனை,

தீமை, நிலையாமை, போர்,

போலிப்புகழ்ச்சி, மறைவு.

புகைக்கொடி தோன்றுதல் Pukaikkoti

tonrutal (comet)

(1) தீமை, அழிவு - bad omen

'கரியவன் புகையினும்

புகைக்கொடி தோன்றினும் ... ...

சூன்முதிர் கொண்மூப்

பெயல்வளம் சுரப்ப' (சிலப். 10; 12-

15)

புட்பயில் பழுமரம் Putpayil palumaram

(fruit tree with birds)

(1) பொலிவு / வளம் - radiance /

opulance

'புட்பயில் பழுமரம் பொலிவிற்று

ஆகிய மட்டிலா வலநகர் வண்ணம்

இன்னதே' (சீவக.93: 3-4)

புண் Pun (wound)

(1) நோவு - pain / hurt

'தீயினால் சுட்டபுண் உள்ளாறும்

ஆறாதே நாவினால் சுட்ட வடு'

(குறள். 129)

(2) கல்வியின்மை - illiteracy /

uneducated

'கண் உடையார் என்பவர்

கற்றோர் முகத்திரண்டு புண்

உடையார் கல்லாதவர்'

(குறள். 393)

புண் உற்ற தீ Pun urra ti (fire in

wound)

(1) துன்பம் - suffer

'புண் உற்ற தீயின் புகை உற்று

உயிர் பதைப்ப' (கம்ப.அயோ .385:

1)


புண் தோய்த்தெடுத்த பொருவேல்


(ஆ) புண் திறந்ததில் ஏறி

நுழைத்தல் Pun tirantatil erl nulaittal

(fire in open wound)

துன்பம்

'புண் திறந்ததில் எரி

நுழைந்தாலெனப் புகைவாள்'

(கம்ப .சுந்.340; 4)

புண்களுள் எஃகெறிதல் Punkalul

ekkerital (spear in wound)

(1) துன்பம் - affliction

'புண்களுள் எஃகெறிந்தது அனைய

புன்சொலால்' (சூளா.1206:3)

(ஆ) புண்ணிடை அயில் Punnitai

ayil (pierce wound with spear)

துன்பம் - pain

'விண்ணிடை அடைந்தனன் என்ற

வெய்ய சொல் புண்ணிடை அயில்

எனச் செவி புகாமுனம்'

(கம்ப. அயோ . 1114: 1-2)

(இ) புண்ணில் கோள் இடுதல்

Punnil kol itutal (pierce wound

with spear) |

(2) கொடுமை, துன்பம்

'பெண்ணில் தீயோய் நின்முதல்

மாயும்பிணி செய்தாய் புண்ணில்

கோல் இட்டாலன சொல்லிப்

பொது நோக்கால்' (கம்ப.சுந்.483: 2-

3)

புண்ணில் புளிப்பெய்தல் Punnil

pulipeytal (pour tamarind in wound)

(1) கொடுமை, தீமை – cruel, evil

'புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும்

தீமை' (நாலா.202: 5)

(2) துன்பம் - affliction

'புண்ணில் புளிப் பெய்தாற்

போலப் புறம் நின்று அழகு

பேசாதே' (நாலா.627:3-4)

புண் தோய்த்தெடுத்த பொருவேல் Pun

toyttetutta poruvell

(1) சிவப்பு நிறம்


207