பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதவி

'அம்பொன் நிலத்து ஏகுகுடி

அகநகரம் அதுதான் - உம்பருலகு

ஒப்பது அதன் தன்மை சிறிது

உரைப்பாம்' (சீவக.106: 3-4)

(ஒப்பு) Heaven, Overworld,

Paradise இயக்கம், இன்பம்,

கடவுட்டன்மை, நிலைபேறு, பாவ

விமோசனம், புனிதம், முழுமை,

மெய்ப்பொருள், விழிப்புணர்வு

புதவி Putavi

(1) கற்பு

'உலந்த நாளவர்க்குத் தோன்றாது

ஒளிக்கு மீன் குளிக்கும் கற்பில்

புலந்தவேல் நெடுங்கண் செவ்வாய்

புதவிநாள் பயந்த நம்பி' (சீவக.2141:

1-2)

புதுப்புனல் (புதுவெள்ளம்) Putuppinal


(freshers)

(1) நிலையற்றது - impermanent

'புதுப்புனலும் பூங்குழையார் நட்பும்

இரண்டும் விதுப்புற நாடின் வேறல்ல

புதுப்புனலும் மாரி அறவே அறுமே,

அவரன்பும் வாரி அறவே அறும்'

(நாலடி.370)

புதுமணல் பரப்புதல் Putumanal

parapputal (spreading new

sand)

(1) விழா, மகிழ்ச்சி - festival, joy

'விழவுமலி மூதூர் வீதியும்

மன்றமும் பழமணன் மாற்றுமின்

புதுமணல் பரப்புமின்' (மணி.1:

50-51)

புல் Pul (grass)

(1) பசுமை / மென்மை - green / soft

'அறம்புரி கொள்கை நான்மறை

முதல்வர் திறம் புரி பசும் புல்

பரப்பினர் கிடப்பி' (புறம்.93: 7-8)

(2) செழிப்பு - luxuriant

'ஆமா நெடுநிரை நன் புல் ஆர'

(புறம்.117: 5)

(3) புன்மை - low/ mean


புல்


'தன் அமர் காதலி புல் மேல்

வைத்த இன் சிறு பிண்டம் யாங்கு

உண்டனன் கொல்' (புறம்.234; 3-4)

(4) வளம் - lush -

'விசும்பின் துளிவீழின்

அல்லால்மற்று ஆங்கே பசும்புல்

தலைகாண்பு அரிது' (குறள். 16)

(5) நிலையாமை - unstable

'உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய

வேண்டுமோ? கற்றறிந்தார் தம்மை

வெகுளாமைக் காப்பமையும்

நெற்செய்யப் புல்தேய்ந்தாற்போல

நெடும்பகை தற் செய்யத் தானே

கெடும்' (பழமொழி. 53)

(6) இகழ்ச்சி, சிறுமை / இழிவு -

contempt, mean / despise

'ஓற்கந்தாம் உற்ற இடத்தும்

உயர்ந்தவர் நிற்பவே நின்ற

நிலையின்மேல் - வற்பத்தால்

தன்மேல் நலியும் பசிபெரிது

ஆயினும் புன்மேயா தாகும் புலி'

(பழமொழி. 70)

(7) மென்மை - soft

தூநறு மென்புல் அருந்தி

விரும்பிய தூநீருண்டு'

(பெரிய. 14.10)

(ஆ) புல் உண்ணல் Pul unnal

(8) தோல்வி / நிலைதாழ்தல்

failure, defeat / downfall

'பகைவர் புல் ஆர்க!' (ஐங்.4:2)

இ) புல் எடுத்தல் (புல்லைக்

கௌவுதல்) Pul etuttal (eat grass)

(9) தோல்வி - failure / defeat

'எல் எடுத்த படை இந்திராதியா

உனக்கு இடைந்து உயிர் கொடு

ஏகுவார் புல் எடுத்தவர்கள் அல்லம்

வேறு சில போர் எடுத்து எதிர்

புகுந்துள்ளோம்' (கம்ப.யுத்.2017: 5-8)

(ஈ) புல்முடி Pulmuti (grass knot)

(10) அடையாளம் - mark

'பண்டு நற்கு அறியாப் புலம்

பெயர் புதுவிர் சந்து நீவிப் புல்

முடிந்து இடுமின்' (மலை.392-393)


209