பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புல் நுனைப் பனி..

(உ) புல் நுனிமேல் நீர் Pul nunimel

nit (dew on tip of grass)

(11) நிலையாமை - unstable

'புல்நுனிமேல் நீர்போல்

நிலையாமை என்றெண்ணி

இன்னினியே செய்க அறவினை'

(நாலடி.29:1-2)

(ஊ) புற்பனி Pupani (dew on

grass)

(12) நிலையாமை, அழிவு - transitory,

destruction

'அறியாப் பருவத் தடங்காரோடு

ஒன்றி நெறியல்ல செய்தொழுகி

யவ்வும் நெறியறிந்த நற்சார்வு

சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட்டாங்கு'

(நாலடி.171)

(எ) புல் நுனை நீர் Pul nunai nir

(water on glass tip)

(13) அழிவு, நொய்மை - fragile, ruin

'புல் நுனை நீரின் நொய்தாப்

போதலே புரிந்து நின்ற'

(கம்ப.ஆரண்.870: 1)

(ஏ) புல் நுனைப் பனிநீர் Pul nunaip

paninir

(14) பொருட்டின்மை - unmindful

'புல் நுனைப் பனிநீர் அன்ன

மனிசரைப் பொருள் என்று உன்னி'

(கம்ப.யுத்.1252:3)

(ஒப்பு) Grass அன்பு, எளிமை,

காதல் எண்ணங்கள், நிலையற்ற

தன்மை, பணிவான பயன்பாடு.

புல் நனைப் பனி வெங்கதிர் காணல்

Pul nunaip pani venkatir kanal

(1) அழிவு / மறைவு, நிலையாமை -

destroy / disappear, transitory

'புல் நுனைப் பனி வெங்கதிர்

கண்டாற் போலும் வாழ்க்கை

பொருளிலை நாளும்'

(சுந் தேவா. 186: 1-2)

(ஆ) வெங்கதிர் கண்ட புற்பனி

Venkatir kanta pupanl


புலி


அழிவு

'வெற்பல் தோன்றிய வெங்கதிர்

கண்டஅப் புற்பனிக் கெடுமாறது

போலுமே' (திருநா தேவா .2752: 3-

4)

புல் மரம் புகைதல் Pul maram

pukaital (grass tree in smoke)

(1) வறட்சி - drought

'புன்மரம் புகைய புகையழல்

பொங்கி மன்னுயிர் மடிய

மழைவளம் சுரத்தலின்' (மணி.11:

82-83)

புலி Puli (tiger)

(1) கொலை வன்மை - killer

'குறுங்கை யிரும்புலிக் கோள்வல்

ஏற்றை ' (நற்.36: 1)

(2) வலிமை - strength

"ஒண் கேழ் வயப் புலி படூஉம்

நாடன்' (நற்.119:3)

(3) சினம் - wrath

'இன் புனிற்று இடும்பை தீர,

சினம் சிறந்து, செங் கண் இரும்

புலிக் கோள் வல் ஏற்றை'

(நற். 148: 9-10)

(4) அஞ்சாமை - fearless

களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி

அதள் இதணத்து' (நற்.351:7)

(5) வீரம் - valom, brave

'மறப் புலிக் குருளை கோள் இடம்

கரக்கும்' (குறு.209; 2) -

(6) ஆற்றல், வலிமை - power,

strength

'மறம் கொள் இரும் புலித் தொல்

முரண் தொலைத்த' (கலி.42.1)

(7) வெற்றி - victory

'வேங்கை அம் சினை என விறற்

புலி முற்றியும்' (கலி.46: 5)

(8) சிறப்பு - eminence

'கிடந்துயிர் மறுகுவ தாயினும்

இடம்படின் வீழ்களிறு மிசையாப்

புலியினும் சிறந்த தாழ்வில்

உள்ளம் தலைத்தலைச் சிறப்ப

(அகம்.29: 2-4)

(9) செருக்கு - hanghty / anogant

'மதர் புலி வெரீஇய மையல்

வேழத்து' (அகம்.39: 11)

(10) பகை - enmity


210