பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலி

'புலிப் பகை வென்ற புண் கூர்

யானை ' (அகம்.202: 3)

(11) தலைமை - leadership/ headship

‘புலி மருள் செம்மல் நோக்கி'

(அகம்,259: 17)

(12) அச்சம் - fearful

'அரவும் புலியும் அந்சுதகவு

உடையா' (அகம்.318; 3)

(13) உறுதி - firm

'புலி பசித்தன்ன மெலிவு இல்

உள்ளத்து' (புறம்.190: 10)

(14), ஆண்மை - manly

'புலிப் போத்து அன்ன, புல்

அணற் காளை' (பெரும். 138)

(15) வீரம் | ஆளுமை - brave /

dominance

'வயக் களிறு பார்க்கும் வயப் புலி

போல, துஞ்சாக் கண்ணர்,

அஞ்சாக் கொள்கையர், அறிந்தோர்

புகழ்ந்த ஆண்மையர், செறிந்த

நூல் வழிப் பிழையா நுணங்கு

நுண் தேர்ச்சி, ஊர் காப்பாளர்,

ஊக்கருங் கணையினர்'

(மது.643-647)

(16) வன்மை - forceful / vehement

'வலி இல் நிலைமையான் வல்

உருவம் பெற்றம் புலியின் தோல்

போர்த்து மேய்ந்தற்று'

(குறள்.273)

(17) உயர்வு | புகழ்ச்சி - lofty / praise

worthy

'.. .. .. .. .. அடுப்பின் கடை

முடங்கும் . நாயைப் புலியாம்

எனல்' (பழமொழி.67: 3-4)

(18) நிலைதாழாமை/ கொள்கைப்பிடிப்பு

- not degrade / of principles

'ஓற்கந்தாம் உற்ற இடத்தும்

உயர்ந்தவர் நிற்பவே நின்ற

நிலையின்மேல் - வற்பத்தால்

தன்மேல் நலியும் பசிபெரிது

ஆயினும் புன்மேயா தாகும் புலி'

(பழமொழி. 70)

(19) பகைத்திறம், தீயவர் / தீமை -

enemy/ the evil, harmful

'கண்ணில் கயவர் கருத்துணர்ந்து

கைமிக நண்ணி அவர்க்கு

நலனுடைய செய்பவேல் எண்ணி

இடர்வரும் என்னார் புலிமுகத்(து)

உண்ணி பறித்து விடல்'

(பழமொழி.109)


புலி

(20) பேராற்றல் / வலிமை - prowess

strength

'தீயன வல்ல செயினும்

திறல்வேந்தன் காய்வன சிந்தியார்

கற்றறிந்தார் - பாயும் புலிமுன்னம்

புல்வாய்க்குப் போக்கில் அதுவே

வளிமுன்னர் வைப்பாரம் இல்'

பழமொழி. 265)

(21) கொடுமை, துன்பம் - cruel,

distress |

'ஒடுங்கி அரவு உறையும் இல்

இன்னா; இன்னா கடும்புலி

வாழும் அதர்' (இன்னா .30: 3-4)

(ஆ) புலி நோக்கு Puli nokku

(22) கூரிய பார்வை - sharp sight

'வலி முன்பின், வல்லென்ற

யாக்கை , புலி நோக்கின் ............

அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண்

மறவர் தாம்' (கலி.4.1-3)

(இ) புலிப் பல் தாலி Pulip pal

tali (necklace in the tiger tooth)

(23) வீரம், மேன்மை - bravery,

eminence

'புலிப் பல் கோத்த புலம்பு மணித்

தாலி' (அகம்.7: 18)

(ஈ) வேங்கை Veikai

(24) வலிமை, கொள்கை - strength,

principles

'கடமா தொலைச்சிய கானுறை

வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா

திறக்கும் - இடமுடைய வானகம்

கையுறினும் வேண்டார்

விழுமியோர், மானம் மழுங்க

வரின்' (நாலடி. 300)

வெற்றி

'விறல் வேங்கையின் தோல்

உடையவனே' (திருவா.6: 1: 4-5)

(உ) கொடுவரி Kotuvari

கொலை, கொடுமை, வெற்றி -

killing, cruel, victory

கோள்வல் கொடுவரி நல்வயமாக்

குழுமும் தாள்வீ பதுக்கைய

கானமிறந்தார் கொலாள்

வினையினாற்ற அகன்றவா

நன்றுணரா மீளிகொள்

மொய்ம்பினவர்' (ஐந்.எழு.36)


211