பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புழு

(எ) புண்டரிகம் Puntarikam

(25) சோழர் - totem of Cola kings

‘புண்டரிகம் பொன்வரைமேல்

ஏற்றிப் புவியளிக்கும் தண் தரள

வெண்கவிகைத் தார்வளவர்

சோணாட்டில்' (பெரிய.606: 1-4)

(ஏ) புலியேறு Puliyeru

(26)வெற்றி - victory

'வென்றடு புலியே றென்ன அமர்

விளையாட்டில் மிக்கார்'

(பெரிய.424: 718)

(ஐ) பொறிப்படு வேங்கை

Porippatu vehkai (spotted tiger)

(27)குறிக்கோள் - of principles

பொறிப்படு வேங்கையின்

குறிப்பிலர் குரங்கவும்'

(பெருங். உஞ்.46:35)

(ஓ) வரிவேங்கை Varivenkai(tiger)

கொடுமை - cruelity

'சேதுபதி காத்தமுத்து ராமலிங்க

துரைராசர் சிங்க மந்திரி மாதுபதி

முத்திருளப்பன் கொடிய

வரிவேங்கை ' (தனிப்.644: 1-2)

(ஒப்பு ) Tiger ஆண்மை ,

ஆற்றல், செயல்பாட்டுத் தன்மை,

திடம், துணிவு, நன்மை ,

நிலைபேறு, பகுத்தறிவு,

புத்துணர்வு, பேரார்வம், மன

உரம், வலிமை, வளமை,

விவேகம்; அடங்காப் பசி,

ஏமாற்றுதல், கோபம், தந்திரம்,

பொய்மை, பொறாமை, வஞ்சகம்,

வெறியுணர்ச்சி,

புழு Pulu (worm)

(1) தீமை - evil, vile

'நாணார் பரியார் நயனில

செய்தொழுகும் பேணா அறிவிலா

மாக்களைப் பேணி ஒழுக்கி

அவரோ டுடனுறை செய்தல்

புழுப்பெய்து புண்பொதியு மாறு'

(பழமொழி. 113)

(2) அற்பம், வலிமையின்மை - mean,

strenghtless


புள்


‘மண்ணிடைப் புழுவின் வாழும்

மானிடர் வலியர் என்றாய்'

(கம்ப ஆரண்.867: 2)

(3) தாழ்வு | இழிவு - low, inferior

'புழுவினும் கடையேன் புனிதன்

தமர்' (திருநா. தேவா.2671: 3)

(ஆ) என்பில் அது (புழு) Enpil

atu

(4) உறுதியின்மை / அன்பின்மை -

without firmness, loveless

'என்பி லதனை வெயில்போலக்

காயுமே அன்பி லதனை அறம்'

(குறள்.77)

(இ) கீடம் Kitam

(5) கோட்பாடின்மை - without

principles

'குலத்தினில் பிறந்திலை கோள்

இல் கீடம்போல் நிலத்தினில்

பிறந்தமை நிரப்பினாய் அரோ'

(கம்ப.யுத்.3957:3-4)

(ஒப்பு) Worm இரகசியம்,

உளச்சான்று; இழிவு, இகழ்ச்சி,

இறப்பு, சூது, நயவஞ்சகமாக

அழிப்பவர், வலிமையின்மை .

புள் Pul (bird)

(1) விரைவு - quickness / speed

புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்

படைக் கலி மா' (நற்.78:9)

(2) உயிர் - breath / soul

'.. ... ... என் உயிர் விலங்கு வெங்

கடு வளி எடுப்பத் துளங்கு மரப்

புள்ளின் துறக்கும் பொழுதே?'

(அகம்.71: 16-18)

(3) நன்மை - good omen

'புள்ளுப் புணர்ந்து இனிய ஆக'

(அகம்.136: 3)

(4) துன்பம் - distress

'பழனுடைப் பெரு மரம்

தீர்ந்தென, கையற்று, பெறாது

பெயரும் புள்ளினம் போல'

(புறம்.209:9-10) -

(5) காலம் | விடியல் -time / dawn -

'நல் இருள் விடியல் புள் எழப்

போகி' (பெரும்.155)

212